போட்டி நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த சமந்தா!
ஆந்திர சினிமாவைப்பொறுத்தவரை நடிகைகளை பாடல் காட்சிகளில்தான் அதிகமாக பயன்படுத்துவார்கள். அதோடு முடிந்தவரை ஆடைகுறைபபு செய்து உரித்து விடுவார்கள். ஆனால் இந்த விசயத்தில் சமந்தா மட்டும் தனித்து நின்றார். அதாவது எத்தனை பெரிய நடிகர் படம் என்றாலும், நான் இந்த அளவுக்குத்தான் கிளாமர் காட்டி நடிப்பேன் என்று உறுதியாக சொல்லி நடித்து வந்தார்.
சமந்தாவுக்கு தெலுங்கு தேசத்தில் அதிகப்படியான ரசிகர்கள இருப்பதால் ஹீரோக்களும் அவர் விசயத்தில் விட்டுக்கொடுத்து வந்தார்கள். ஆனால், அஞ்சான் படத்தில் தனது கவர்ச்சிக்கு திறப்பு விழா நடத்தியுள்ள சமந்தா, கத்தியிலும் சுண்டியிழுக்கும் கிளாமரை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். ஆக, இந்த இரண்டு படங்களிலும் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு சமந்தா சூடு காட்டுவார் என்கிறார்கள்.
இந்த நிலையில், இனி தெலுங்கு படங்களிலும் கிளாமராக நடிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் சமந்தா. அவர் வட்டம் போட்டு நடித்து வந்தபோதே அவருடன் போட்டி போட முடியாமல் விலகி நின்ற ஆந்திர ஹீரோயின்கள், அவர் கவர்ச்சி காட்டி நடித்தால் நம்மையெல்லாம் கட்டம் கட்டி அடிப்பாரே எனறு அனைத்து நடிகைகளும மிரண்டு போய் நிற்கிறார்களாம்.
மேலும், சமந்தாவின் இந்த திடீர் கவர்ச்சி பிரவேசம் கண்டு அவரது அபிமானத்திற்குரிய இளவட்ட ஹீரோக்கள் அவரிடம் இன்னும் அதிகப்படியான கரிசனம் காட்டத் தொடங்கியிருப்பதோடு, சிபாரிசுகளையும் முடுக்கி விட்டுள்ளார்களாம். இதனால் சமந்தாவுக்கான புதிய படங்கள் அவரது டைரியை வேகமாக புல் பண்ணி வருகிறதாம்.
No comments: