மும்பையில் விஐபி வெற்றியை கொண்டாடிய தனுஷ்
மயக்கம் என்ன, 3, நய்யாண்டி என ஹாட்ரிக் ஃபிளாப் படங்களை கொடுத்த தனுஷ். நீண்ட இடைவெளிக்கு பிறகு வேலையில்லா பட்டதாரியில் வெற்றியை ருசித்திருக்கிறார். இதனை தினமும் பார்ட்டி வைத்து கொண்டாடி வருகிறார். படம் வெளியான அன்றே நட்சத்திர ஒட்டல் ஒன்றில் தன் சென்னை நண்பர்களுக்கு பார்ட்டி வைத்து விட்டு அன்று இரவே பிளைட் பிடித்து மும்பை சென்று விட்டார்.
அங்கு தனுஷின் வெற்றியை ஷமிதாப் படத்தின் இயக்குனர் பால்கி அமிதாப்பிடம் சொல்லியிருக்க, தனுஷை பார்த்த அவர் கட்டிப்பிடித்து பாராட்டினார். அக்ஷரா ஹாசனும் பாராட்டினார். அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்ட தனுஷ், அந்த தருணத்தில் அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு எல்லோருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். அன்று இரவே தனது மும்பை நண்பர்களுக்கு மும்பை நட்சத்திர ஓட்டலில் ஜாம் ஜாம் என்று பார்ட்டி கொடுத்திருக்கிறார்.
No comments: