ஜிகர்தண்டா தள்ளி போனதற்கு தனுஷ் தான் காரணமா ?video
தமிழ் சினிமாவில் இந்த வருடத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள படம் ஜிகர்தண்டா. சித்தார்த், லட்சுமி மேனன் மற்றும் சிம்ஹா நடித்துள்ள இப்படம் போன மே மாதமே ரிலீஸ் ஆகவேண்டியது, ஆனால் சில பல காரணங்களால் தேதி தெரிவிக்காமலே இழுத்தடித்தனர். இறுதியில் இம்மாதம் 25 தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு விளம்பரங்களும் வெளியிடப்பட்டன. ஆனால் கடைசி நேரத்தில் ஏதோ தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த வெள்ளிக்கிழமை வெளியாகாது என படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் தெரிவித்தார்.இது ஒருபுறம் இருக்க சினிமா வட்டாரங்களில் ஜிகர்தண்டா ரிலீஸ் தள்ளி போனதுக்கு காரணம் தனுஷ் தான் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷை வைத்து ஏற்கனவே பொல்லாதவன், ஆடுகளம், நய்யாண்டி போன்ற படங்களை தயாரித்தவர் என்பது எல்லாருக்கும் தெரியும், இன்னும் சொல்ல போனால் அவர்களின் நட்பின் ரீதியில் வேலையில்லா பட்டதாரி படத்தில் கூட அமலாபாலுக்கு அப்பாவாக நடித்தார்.வேலையில்லா பட்டதாரி வெளியாகி பட்டைய கிளப்பிட்டு இருக்கும் நிலையில் ஜிகர்தண்டா வெளியானால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்று தெரிந்த தனுஷ், கதிரேசனை அழைத்து ஜிகர்தண்டாவை இப்போ ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று சொல்லியுள்ளதாக தகவல்.தனுஷ் சொல்லிவிட்டாரே என்று தயாரிப்பாளர் கதிரேசன் யாருக்கும் சொல்லாமல் ஜிகர்தண்டா படத்தின் வெளியீட்டை தள்ளி போட்டுவிட்டார். இதனால் ஜிகர்தண்டா படக்குழுவே அதிர்ச்சியானது. இருந்தாலும் எங்கள் படத்தின் வெற்றியை எப்படை வந்தாலும் தடுக்க முடியாது என்று பெரும் நம்பிக்கையில் உள்ளனர்.மயூரா சங்கரின் இளமை எனும் பூங்காற்று பாடல் -
No comments: