கோலிவுட்டில் சாதித்த அரிமா நம்பி -
சென்னை: சமீபத்தில் வெளியான அரிமா நம்பி படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த் நடித்துள்ள அரிமா நம்பி படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து வினியோகஸ்தர்கள் தரப்பில் கூறியதாவது: கலைப்புலி தாணு தயாரிக்கும் படம் என்றாலே இண்ட்ஸ்ட்ரியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். காரணம், பிரமாண¢டமான படங்களை அவர் தருவார். இந்த படத்துக்கும் அதே போல் எதிர்பார்ப்பு இருந்தது. அதை இந்த படம் முழுமையாக பூர்த்தி செய்துள்ளது. திரையிட்ட எல்லா தியேட்டர்களிலும் இந்த படம் நல்ல வசூலை தந்துள்ளது.
சென்னையில் முதல் வாரத்தில் வீக் எண்டில் மட்டும் 1 கோடி ரூபாயை தாண்டி வசூலித்துள்ளது. சென்னை புறநகர் பகுதி ஏரியாவில் முதல் 2 வாரத்தில் ரூ.2.31 கோடி வசூலித்து புது சாதனை படைத்துள்ளது. பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக இந்த படம் வசூலை ஈட்டியுள்ளது. இதற்கு படத்தை திறம்பட கலைப்புலி தாணு புரமோட் செய்த விதமும் ஒரு காரணம். மவுத் டாக் காரணமாக படத்தை காண வரும் ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. இவ்வாறு வினியோகஸ்தர்கள் கூறினர்.
பட டைரக்டர் ஆனந்த் ஷங்கர் கூறுகையில், பரபரப்பான த்ரில்லராக இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டேன். அதற்கு தகுந்தது போல் டீம் அமைந்துவிட்டது. படத்துக்கு பெரிய பலமாக தயாரிப்பாளர் தாணு அமைந¢தார். செலவு பற்றி கவலைப்படாமல் ப¤ரமாண்டமாக படத்தை உருவாக்க அவர்தான் காரணம் என்றார்.
No comments: