விஜய்யின் சூப்பர் ஸ்டார் விழா தற்காலிகமாக ரத்து...!
நாங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு படி விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அறிவித்த அந்த வாரப் பத்திரிகை, ஆகஸ்ட் 15-ல் மதுரையில் விழா எடுத்து அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தையும் கொடுத்து விட வேண்டும் என்று விழா ஏற்பாடுகளில் மும்முரமாகியிருந்தது.
ஆனால், இந்த விழாவுக்கு அமைக்கப்பட்ட குழு, விழாவில் கலந்து கொள்ள முக்கிய கோலிவுட் நடிகர்-நடிகைகளை திரட்டும் பணியில் இறங்கியது. அப்போது, ஒரு பிரபல நடிகரின் வாரிசு, ரஜினி அண்ணன்தானே இப்போதும் சூப்பர் ஸ்டார். அவர் சினிமாவில் இருக்கிறப்பவே இன்னொரு நடிகருக்கு சூப்பர் ஸ்டார் பட்டமா? ஆளை விடுங்க. என்னையெல்லாம் இந்த விழாவுக்கு தயவுசெய்து கூப்பிடாதீங்க என்று நெத்தியடியாக சொல்லிவிட்டு நழுவிடிக்கொண்டாராம்.
அதேபோல் இன்னும் சில இளவட்ட ஹீரோ மற்றும் காமெடியன்கள், தாங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு தளபதிக்கு கிரீடம் சூட்டினால், தல எங்களை கோபித்துக்கொள்வார். அதோடு ரஜினிக்கும் எதிர்ப்பாக செயல்பட்டு போன்ற நிலை உருவாவதோடு, எங்களுக்கு போட்டியாக ஒரு எதிரணியும் உருவாகும். அதனால் எதற்கு வம்பை விலைகொடுத்து வாங்க வேண்டும் என்று தங்கள் கருத்தை சொல்லி கழண்டு கொண்டார்களாம்.
ஆக, விழாவில் கலந்து கொள்ள முன்னணி நடிகர்-நடிகைகள் யாருமே வரமாட்டார்கள் என்பது புரிந்து விட்டது. இதற்கிடையே ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினம் என்பதால், மதுரையில் விழா நடக்க அனுமதி வழங்குவதிலும் காவல்துறைக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாம். இதையெல்லாம் பார்த்த விழாக்குழு, விழா நடத்தும் முயற்சியில் இருந்து பின்வாங்கியுள்ளதாம். அதனால் விஜய்யின் சூப்பர் ஸ்டார் விழா காலவரையறை இன்றி ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments: