என்னை விட திறமைசாலிங்க இருக்காங்க...நான் எப்போதும் தளபதிதான்...விஜய் பேச்சு...!
தமிழ்த் திரையுலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கருத்துக் கணிப்பை வார இதழ் ஒன்று சில வாரங்களுக்கு முன் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து சில சர்ச்சைகளும் வெளிவந்தன. பின்னர் ஒரு நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் அனைவரையும் கவர்ந்த நடிகர் ஆர்யா என்ற ஒரு கணிப்பை வெளியிட்டது. இதனால் கருத்துக் கணிப்புகள் அனைத்துமே ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் வெளியிடுவதாக சிலர் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இதையடுத்து பல்வேறு விதமான வதந்திகளும், செய்திகளும் பரவின. இந்த நிலையில் நேற்று நடந்த விஜய் டிவி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய், “நான் பழசையெல்லாம் மறக்க மாட்டேன். நான் எப்போதும் தளபதியாகவே இருக்கிறேன். சூப்பர் ஸ்டார்லாம் அப்புறம்தான். என்னை விட நல்லா நடிக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க. என்னை விட அழகா இருக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க. நான் எப்பவுமே சாதாரணமான ஆளு. டைம்-ல கோல் போடற எல்லாருமே சூப்பர் ஸ்டார்தான். கோல் போடும் போது பந்து மட்டும்தான் உள்ள போகணும், நாம இல்லை. அடுத்ததாக இயக்குனர் ஷங்கர் படத்தில் அவருடைய ஸ்டைல் கமர்ஷியல் படத்தில் மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறேன்,” என்றார்.
ஆக, அடுத்ததாக சூப்பர் ஸ்டார் பட்டத்தையும் பெற விஜய் ஆசைப்படுகிறார் என்பது அவருடைய பேச்சிலிருந்தே தெரிகிறது.
No comments: