Header Ads

இன்றைய பேஷன்: இரண்டாவது கல்யாணம்

ரண்டாவது கல்யாணம்’ இன்றைய திரை உலகில் பேஷனாகிவிட்டது. இரண்டாவது திருமணம் செய்தவர்களை ஏதோ பெரிய குற்றம் செய்தவர் போல் பார்த்த காலம் உண்டு. அதனால் சிலர் ரகசிய திருமணம் செய்துவிட்டு, அதை மறைத்தபடி வாழ்ந்துவந்தனர். ஆனால் அது இப்போது ஒரு சிறப்புத் தகுதியாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நிலைமை மாறிக்கொண்டிருக்கிறது.

நடிகைகள் பலர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டு சகல மரியாதையுடன் வாழ்ந்து வருகிறார்கள். ‘இது மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத விஷயம். முதல் திருமணத்தை ஒருகெட்ட கனவாக நினைத்து மறந்துவிட்டோம். இப்போதுதான் முழு மகிழ்ச்சியோடு இருக்கிறோம்’ என்று சில நடிகைகள் வெளிப்படையாக சொல்கிறார்கள். சில நடிகர்கள், தங்கள் முதல் மனைவியிடம் அனுமதி பெற்று இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார்கள்.

‘ஏற்கனவே திருமணமானவரை நடிகைகள் ஏன் திருமணம் செய்துகொள்கிறார்கள்?’ என்ற கேள்விக்கு தெள்ளத் தெளிவான பதில் இதுவரை சொல்லப்படவில்லை என்றாலும், பிரபல நடிகைகளுக்கு புதியவர் கணவராக வாய்ப்பது குதிரைக்கொம்பாகவே இருக்கிறது. காரணம் சினிமாவில் அவர்கள் உயர்ந்த இடத்தை பிடிப்பதற்குள் ஆயுளில் பாதி வயதை தொட்டுவிடுகிறார்கள். அதற்கு பிறகு புதியவரோடு வாழ்வது சிரமம் என்று கருதி, ஏற்கனவே திருமணமான பழையவரே போதுமானவர் என்று முடிவு செய்துவிடுகிறார்கள். அவருடைய முதல் திருமண வாழ்க்கையை பற்றி, அந்த நடிகைகளுக்கு கவலைப்படுவதற்கு நேரமில்லை. ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்று திருப்தியடைந்து, ஏற்கனவே திருமணமானவரை காத்திருந்து  கைப்பிடித்து தங்கள் ‘புதிய’ வாழ்க்கையை தொடங்கிவிடுகிறார்கள்.

அப்படிப்பட்ட சில நடிகைகளின் வாழ்க்கையை இங்கு அலசுவோம்!

கரீனாகபூர்–சைய்ப் அலிகான்: கரீனா மார்க்கெட்டின் உச்சியில் இருக்கும்போதே சைய்ப் அலிகானை திருமணம் செய்துகொண்டார். இருவரும் சினிமாவில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள். சைய்ப் தனது முதல் மனைவி அம்ருதாவை விவாகரத்து செய்துவிட்டு, கரீனாவை இரண்டாவதாக கரம் பற்றினார். முதல் திருமணத்தில் சைய்ப் அலிகானுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

கரீனாகபூர்–ஷாஹித் கபூர் காதல் விவகாரம் வெகுகாலம் பேசப்பட்டு வந்தது. ஆனால் திருமணத்திற்கு வாய்ப்பில்லாமல் போனது. அதனால் கரீனா, சைய்ப் அலிகானை வாழ்க்கை துணைவன் ஆக்கிக்கொண்டார். 

ராணி முகர்ஜி– ஆதித்யா சோப்ரா:  பிரபல தயாரிப்பாளர், இயக்குநர் யஷ்ராஜின் மகன், ஆதித்யா சோப்ரா. இவர் தனது முதல் மனைவி பாயல் கன்னாவை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக பிரபல இந்தி நடிகை ராணி முகர்ஜியை திருமணம் செய்து கொண்டார். 36 வயதாகும் ராணிக்கு இது முதல் திருமணம். 42 வயதாகும் ஆதித்யாவிற்கு இரண்டாவது திருமணம்.

திருமணத்திற்கு பிறகு தனது சினிமா மார்க்கெட் சரிந்துவிடும் என்ற பயத்தில் சில நடிகைகள் திருமணத்தை தள்ளிப்போடுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் திருமணத்திற்கு பிறகும் நடிகைகளுக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. அதற்கு உதாரணமாக இருப்பவர், ராணி முகர்ஜி. அவர் நடித்த ‘கில் தில்’, ‘மர்தாணி’ ஆகிய படங்கள் அவர் புகழை பரப்பும் என தெரிகிறது.

வித்யாபாலன்–சித்தார்த்: வித்யாபாலன் பல விருதுகளை பெற்றிருக்கும் புகழ்பெற்ற நடிகை. சினிமாவில் முன்னணியில் இருக்கும்போதே தன்னுடைய திருமணத்தை அறிவித்தார். அதனால் அவருடைய திரை வாழ்க்கையில் எந்த பின்னடைவும் இல்லை. ‘‘ரசிகர்கள் ரொம்பவே மாறிவிட்டார்கள். வாழ்க்கை வேறு. நடிப்பு வேறு என்று பிரித்துப் பார்க்க கற்றுக் கொண்டார்கள்’’ என்றுகூறி சந்தோஷப்பட்டார்.

பிரபல டெவிலிஷன் நிறுவனத்தின் உயர் அதிகாரியான சித்தார்த்துக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ‘‘வித்யாவை எனக்குப் பிடித்திருக்கிறது. அவருக்கும் என்னைப் பிடித்திருக்கிறது. இருவரும் திருமணம் செய்துகொண்டோம். அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை” என்றார், சித்தார்த்.

“அவர் அருமையான மனிதர். எனக்கு நல்ல துணையாக இருப்பார் என்று நம்புகிறேன். அவருக்கு சினிமா வாழ்க்கையையும் நிஜ வாழ்க்கையையும் பிரித்துப் பார்க்கும் மனப் பக்குவம் இருக்கிறது. வெகுளித் தனமான என் சுபாவம் அவருக்குப் பிடித்திருப்பதாக சொன்னார். எனக்கு தகுதியான துணையை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன். உண்மையில் இறைவன் எனக்கு கொடுத்திருக்கும் மிகப் பெரிய விருது சித்தார்த்தான்” என்று சிலிர்க்கிறார், வித்யாபாலன்.

ஜுகி சாவ்லா–ஜெய் மேத்தா : ஷாருக்கான், அமீர்கானுடன் இணைந்து பல வெற்றிப் படங்களை தந்தவர் ஜுகி சாவ்லா. தன்னைவிட வயதில் மூத்த தொழிலதிபர் ஜெய் மேத்தாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ஐ.பி.எல். கிரிக்கெட் கொல்கத்தா நைட்ரைடர்ஸின் பங்குதாரர் இவர். திருமணத்திற்கு பிறகும் ஜுகி சாவ்லா நடிக்கிறார்.

லாரா தத்தா–மகேஷ் பூபதி: நடிகை லாரா தத்தா விளையாட்டு வீரர் மகேஷ் பூபதியை திருமணம் செய்துகொண்டார். மகேஷ் பூபதி ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றவர்.

அமீர்கான்–கிரண்ராவ்:


அமீர்கான் தனது முதல் மனைவி ரீனாதத்தை விவாகரத்து செய்துவிட்டு கிரண்ராவை திருமணம் செய்துகொண்டார். இயக்குநரான கிரண் திருமணத்திற்குப் பிறகு பல படங்களை இயக்கியுள்ளார். அமீர்கான் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தி வருகிறார். இரண்டாவது திருமணம் எந்த விதத்திலும் தனது தொழில், வாழ்க்கையை பாதிக்கவில்லை என்கிறார் அமீர்கான்.

அனுராக் கஷ்யப்–கல்கி கோச்லீன்:இயக்குநர் அனுராக் கஷ்யப் தன்னுடைய முதல் மனைவி ஆர்த்தி பஜாஜை விவாகரத்து செய்துவிட்டு கல்கியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு அனுராக் பல வெற்றிப்படங்களை டைரக்ட் செய்திருக்கிறார்.

கரீஷ்மா கபூர்–சஞ்சய் கபூர்:   தொழிலதிபர் சஞ்சய் கபூரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார், கரீஷ்மா கபூர். சஞ்சய் கபூரின் முதல் மனைவி நந்திதா விவாகரத்து பெற்றுவிட்டார். நந்திதா பேஷன் டிசைனராக பணியாற்றுகிறார்.
ஷில்பாஷெட்டி–ராஜ் குந்ரா: நடிகை ஷில்பாஷெட்டி– அக்ஷய் குமார் காதல் வெகு பரபரப்பாக அலசப்பட்ட விஷயம். பிறகு என்ன காரணமோ அக்ஷய், டுவிங்கிளை மணந்து கொண்டார். இதனை அறிந்த ஷில்பா ஷெட்டி சிறிதும் தாமதிக்காமல் தொழிலதிபர் ராஜ் குந்ராவை திருமணம் செய்துகொண்டார். குந்ரா முதல் மனைவி கவிதாவை விவாகரத்து செய்துவிட்டு ஷில்பாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

ரவீனா தாண்டன்–அனில் தடானி: பிரபல நடிகையான ரவீனாவை, வெகுகாலமாக அக்ஷய்குமாருடன் இணைத்து பேசினார்கள். பின்பு அனில் தடானியுடனான திருமண அறிவிப்பு வெளியானது. இவர் தனது முதல் மனைவி நதஷாவை விவாகரத்து செய்துவிட்டு ரவீனாவை திருமணம் செய்துகொண்டார். அனில், சினிமா வினியோகஸ்தர்.

ஸ்ரீதேவி–போனிகபூர்:

ஸ்ரீதேவி, போனிகபூரின் இரண்டாவது மனைவி. இவர்களுடைய திருமணம் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது. போனிகபூரின் முதல் மனைவி மோனாகபூர், இவர்கள் திருமணத்தை தடுக்க எவ்வளவோ போராடினார். முடியவில்லை. அந்த மன வருத்தத்திலேயே மோனா இறந்துவிட்டார்.

ஸ்ரீதேவியின் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கிறது. திருமணத்திற்கு பின்பு  இவரும் நடித்துக்கொண்டிருக்கிறார். 

ஹேமமாலினி–தர்மேந்திரா:ஹேமமாலினி–தர்மேந்திராவின் காதல் கதை மிகவும் சுவாரசியமானது. தர்மேந்திரா ஏற்கனவே திருமணமானவர் என்பதால் ஹேமாவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. தர்மேந்திராவின் முதல் மனைவியும் இவர்கள் திருமணத்தை நிறுத்த போராடினார். ஆனால் அவர் போராட்டத்தையும் மீறி திருமணம் நடந்துவிட்டது.

No comments:

Powered by Blogger.