ரம்ஜானை முன்னிட்டு குடும்பத்தினருக்கு பிரியாணி செய்து கொடுத்த யுவன் சங்கர் ராஜா
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்பவர் யுவன் சங்கர் ராஜா. இவருடைய இசையில் பல படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. கார்த்தி நடிப்பில் வெளியான பிரியாணி படம் இவருக்கு 100வது படமாகும். தற்போது சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘அஞ்சான்’ படத்திற்கு இவர் இசையமைத்துள்ளார். மேலும் இவரது இசையில் ‘தரமணி’, ‘வை ராஜா வை’, ‘வானவராயன் வல்லவராயன்’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
இசைஞானி இளையராஜாவின் மகனான இவர், சமீபத்தில் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவதாகவும் அதற்கு நான் பெருமையடைவதாகவும் கூறினார். இந்த முடிவிற்கு என் குடும்பத்தினர் ஆதரவு தருகின்றனர் என்றும் கூறினார். அதன்படி யுவன், மசூதிக்கு செல்வது தொழுகை செய்வது என்று இஸ்லாம் மதத்தை பின்பற்றி வந்தார்.
ரம்ஜான் பண்டிகையான இன்று யுவன் சங்கர் ராஜா, காலையில் மசூதிக்கு சென்று விட்டு தன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிரியாணி செய்து கொடுத்துள்ளார்.
No comments: