Header Ads

கவர்ச்சி லிமிட்டை தாண்டி பரபரப்பை ஏற்படுத்திய சமந்தா!

ஆந்திரா சினிமாவில் பெரும் நடிகைகளை தோலுரித்து விடுவார்கள். ஆனால் அப்படிப்பட்ட பீல்டிலேயே இன்னமும் கவர்ச்சி விசயத்தில் கட்டுப்பாடு காத்து வருகிறார் சமந்தா. அதிகமான கிளாமர் காட்டி நடிக்க வேண்டும் என்று கதை சொல்லும்போது டைரக்டர்கள் கேட்டுக்கொண்டால், என் லிமிட் இதுதான். அதற்கு மேல் ஆடை பிரயோகம் செய்ய முடியாது என்று முன்கூட்டியே சொல்லி அந்த படங்களைகூட தவிர்த்து விடுவார் சமந்தா.

ஆனால், அஞ்சான், கத்தி படங்களில் நடித்த பிறகு சமந்தாவின் நிலையில் நிறைய மாற்றங்கள். தெலுங்கு படங்களில் நடித்ததை விடவும் இந்த படங்களில் கூடுதல் கவர்ச்சி சேவை புரிந்திருக்கிறார். இதனால் ஆந்திர ரசிகர்களுக்கு சமந்தா துரோகம் இழைத்து விட்டதாக அங்குள்ள மீடியாக்கள் சரமாரியாக செய்தி பரப்பி விட்டு வருகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் ஒரு நகை கடை திறப்பு விழாவுக்கு வருகை புரிந்த சமந்தா, தான் இதுவரை எந்த தெலுங்கு படத்திலும நடித்திராத அளவுக்கு படுகவர்ச்சியான உடையணிந்து சென்றிருந்தாராம். நேரடியாக அவர் கொடுத்த இந்த கவர்சசி அட்டாக்கை காண ஏராளமான கூட்டம் திரண்டு விட்டதாம்.

ஆனபோதும் எந்தவித ஒளிவுமறைவும் இன்றி கிளாமர் மயமாக காட்சி கொடுத்த சமந்தா, ரசிகர்களைப்பார்த்து கையைசைத்தபடியே காரில் ஏறி பறந்தாராம். ஆக, சமந்தாவின் இந்த திடீர் கவர்ச்சிமய போட்டோக்கள்தான் அங்குள்ள மீடியாக்களுக்கு தற்போது தீனி போட்டுக்கொண்டிருக்கிறது.

No comments:

Powered by Blogger.