வேலையில்லாபட்டதாரி திரை விமர்சனம் :
தமிழ் சினிமாவில் பார்த்து புளித்து போன ஹீரோயிஸம் கதை தான். ஆனால் அதை தனுஷ் என்ன செய்திருக்கிறார் என்பதே ஸ்பெஷல். படத்தின் பெயர் வேலையில்லா பட்டதாரி, மற்ற படங்களில் தனுஷ் என்ன ஐபிஸ் அதிகாரியாவா இருந்தாரு, திருடா திருடி, யாரடி நீ மோகினி, பொல்லாதவன், திருவிளையாடல் படங்களின் அச்சு பிசுறாத கதாபாத்திரம் தான் தனுஷ்க்கு.
இப்படத்தில் ஹைலட் என்னவென்றால் தனுஷின் மற்ற படத்திலெல்லாம் அவர் என்ன படித்திருக்கிறார் என்பதே சொல்ல மாட்டார்கள், ஆனால் இதில் இன்ஜினியரிங் படித்ததாக காட்டுகிறார்கள். வேலை கிடைக்காமல் சுத்தும் தனுஷ், நல்ல வேலையில் இவரது தம்பி, வழக்கம் போல் அப்பாவிடம் திட்டுவாங்குகிறார். அமலா பாலிடம் முதலில் திட்டு வாங்கி காதலில் விழுந்து டூயட் பாடுகிறார்.
இப்படி ஏதும் பொறுப்பில்லாமல் சுத்தும் தனுஷின் வாழ்க்கையில் பெரிய இடியாக அம்மாவின் வழியில் வர அதை தொடர்ந்து கிடைக்கு வேலை, அங்கு இவர் எதிர்கொள்ளும் பிரச்சனை. இதை இவர் எப்படி சமாளிக்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் பலமே முதலில் அனிருத்தின் இசை தான், மனுஷன் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார். பின்னணி இசையில் பட்டையை கிளப்பியிருக்கிறார். பாடல்கள் ஏற்கனவே ஹிட் லிஸ்ட் தான், மேலும் தனுஷின் அப்பா, அம்மாவாக வரும் சமுத்திரக்கனி, சரண்யா தான் எதர்த்தமாக ஸ்கோர் செய்கிறார்கள். படத்தின் இயக்குனரான வேல்ராஜே ஒளிப்பதிவாளர் என்பதால் ஒளிப்பதிவில் கலக்கியிருக்கிறார். வசனங்களில் தீப்பறக்கிறது. குறிப்பாக தற்போது நாட்டில் உள்ள இன்ஜினியரிங் படித்த மாணவர்களின் நிலையை கூறும் போது தான் வசனம் சூப்பர் வேல்ராஜ்.
படத்தின் பலவீனமே இரண்டாம் பாதி தான், கொஞ்சம் ரசிகனை சோதிக்கிறது, விவேக்கின் ரீ எண்ட்ரி சொல்லும் அளவிற்கு இல்லை. அமலா பால் நடிப்பு ரசிக்கும் படியாக இல்லை.
இன்றைய சமுதாயத்தில் இன்ஜினியரிங் படித்தவர்கள் நிலைமையை திரைப்படமாக எடுத்ததற்கே வேல்ராஜ்ஜை பாராட்டலாம்.
மொத்தத்தில் சைக்கோ தனுஷ்க்கு குட்பை, பழைய ஃபுல் பார்மில் ரீஎண்ட்ரி கொடுத்தற்காகவே இப்படத்தைரசித்து பார்க்கலாம்.
No comments: