சிவகுமார் பெயரை சூர்யா கெடுத்துவிடுவார்: படவிழாவில் பரபரப்பு ஏற்படுத்திய பார்த்திபன்
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘அஞ்சான்’ படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் பேசும்போது,
சூர்யா வளர, வளர அவருடைய அப்பா சிவகுமார் பேரை கெடுத்துடுவார்னு நினைக்கிறேன் என்று ஒரு குண்டை தூக்கிப்போட்டார். அதற்கு அவர் விளக்கமும் கூறினார். அதாவது, சினிமாவில அடக்கம், அமைதி, பணிவுக்கு பெயர் போனவர் சிவகுமார். அவரை முந்திக்கொண்டு இப்போ சூர்யா எல்லா விழாக்களிலும், எல்லோரிடமும் ரொம்ப அடக்கமாகவும், அமைதியாகவும், பணிவோடும் நடந்து கொள்கிறார் என்று விளக்கம் அளித்தார்.
மேலும், அவர் பேசும்போது, நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு வந்த சூர்யா, நான் உங்ககூட நடிக்கிறேன்னு தெரியுமா? என்று என்னிடம் கேட்டார். ஒரு பெரிய ஹீரோவின் படத்தில் நான் நடிப்பதை, அவர் என்னுடன் நடிப்பதாக கேட்டது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. அவருடன் இணைந்து நடிப்பதை இந்த பிறந்தநாளில் சூர்யா தனக்கு கொடுத்த விருந்தாக எடுத்துக் கொள்வதாகக் கூறி தனது பேச்சை முடித்தார்.
No comments: