தாயுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட நண்பனை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை
புதுவை தர்மாபுரி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 34). இவரது நண்பர் ஞானவேல். இவருக்கும் முருகனின் தாயாருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அது முருகனுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் கடந்த 1.9.2008 ஞானவேலை கட்டையால் அடித்து கொலை செய்தார்.
இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர். இது தொடர்பாக புதுவை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை தலைமை நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். குற்றம் சாட்டப்பட்ட முருகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
No comments: