Header Ads

நக்மாவிடம் அத்துமீறிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.; வீடியோ காட்சிகள் வெளியாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை

உத்தரபிரதேச மாநிலம் மீரட் தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நடிகை நக்மா அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் அங்குள்ள ஹர்பூர் தொகுதிக்கு பிரசாரம் செய்ய நடிகை நக்மா சென்றார். அப்போது, ஹர்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கஜ்ராஜ் சிங், நடிகை நம்மாவை வலுகட்டாயமாக பிடித்து முத்தமிட முயற்சி செய்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ கட்சிகள் வெளியாகின. இது தொடர்பாக நக்மா எந்த ஒரு புகாரும் கொடுக்கவில்லை.

காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்தும் கொடுக்கப்படும் என்று ராகுல் காந்தி கூறிவரும் நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் இவ்வாறு செய்தது அனைவரையும் முகம் சுழிக்க செய்துள்ளது. இதற்கு பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது தொடர்பாக கேள்வி எழுந்துள்ளது. தொலைக்காட்சிகள் மற்றும் இணைய தளங்களில் வீடியோக்கள் வெளியாகிய நிலையில் காங்கிரஸ் கட்சியோ, நக்மாவோ எதுவும் தெரிவிக்கவில்லை. மேலும், நடிகை நக்மா மறுத்துள்ளார். இதுபோன்ற சம்பவம் நடக்கவே இல்லை என்று மறுத்துள்ளார் என்று தனியார் செய்திநிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.  காங்கிரஸ் எம்.எல்.ஏ. தொடர்ந்து தண்டனையில் இருந்து தப்பித்து செல்கிறார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிரமோத் காத்யான், கஜ்ராஜ் சிங்கை கடுமையாக விமர்சித்துள்ளார்

No comments:

Powered by Blogger.