Header Ads

வாக்காளர் அடையாள அட்டையில் ஆள்மாறாட்டம்: சமந்தா ஷாக் -

சமந்தாவின் போட்டோ மகேஸ்வரம்மா என்ற பெண்ணின் வாக்காளர் அட்டையில் வெளியிடப்பட்டதால் சமந்தாவும் அவரது குடும்பத்தாரும் அதிர்ச்சி அடைந்தனர். வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு போன்றவைகளில் அடிக்கடி ஆள்மாற்றி போட்டோக்களை ஒட்டித்தருவது சர்ச்சைக்குள்ளாகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். சமீபத்தில் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது. ஆந்திராமாநிலம் மெஹபூப்நகர் பகுதியில் வசிப்பவர் மகேஸ்வரம்மா. இவர் தனது வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்வதற்காக விண்ணப்பித்திருந்தார். 

அதன்படி அவரது வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்யப்பட்டு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. அதைபார்த்ததும் மகேஸ்வரம்மா ஷாக் ஆனார். வாக்காளர் அட்டையில் தனது பெயர் மகேஸ்வரம்மா என்று சரியாக அச்சிடப்பட்டிருந்தாலும் அதில் பிரின்ட் செய்யப்பட்டிருந்தது நடிகை சமந்தாவின் புகைப்படம்.

இதைப் பார்த்ததும் அவருக்கு சிரிப்பதா? கோபப்படுவதா? என்று தெரியாமல் திணறினார். இதுபற்றி தகவல் அறிந்த சமந்தாவும் என் போட்டோ எப்படி மகேஸ்வரம்மா வாக்காளர் அட்டையில் ஒட்டப்பட்டது என்று குழப்பத்தில் ஆழ்ந்தார். அவரது குடும்பத்தாரும் அதிர்ச்சி அடைந்தனர்.

No comments:

Powered by Blogger.