Header Ads

கூலிப்படையை ஏவி கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்த வாலிபர் கைது

கள்ளக்காதலியின் கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்த ரியல் எஸ்டேட் ஏஜெண்டு உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாலிபர் கொலை

புனே நார்கே பகுதியை சேர்ந்தவர் மிலிந்த் நாயக்(வயது22). இவர் இணைய தள மையம் நடத்தி வந்தார். கடந்த 17–ந்தேதி தனது வீட்டின் அருகே மிலிந்த் நாயக் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனையில், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மிலிந்த் நாயக்கின் மனைவியிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது, தனது கள்ளக்காதலன் தான் கணவரை கொலை செய்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். விசாரணையில் வெளியான தகவல்கள் விபரம் வருமாறு:–

கள்ளக்காதல்

சமீபத்தில் மிலிந்த் நாயக்கின் மனைவிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த்(22) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. ஸ்ரீகாந்த் ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக உள்ளார். மிலிந்த் நாயக் வேலைக்கு சென்ற பின்னர் ஸ்ரீகாந்த் அவரது மனைவியிடம் சென்று பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இந்த விவகாரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு மிலிந்த் நாயக்கிற்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர் இருவரையும் கண்டித்தார்.

கழுத்தை நெரித்து கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீகாந்த், மிலிந்த் நாயக்கை கெலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக ரூ.6 லட்சம் கொடுத்து கூலிப்படையை சேர்ந்த 4 பேரை ஏற்பாடு செய்தார். அவர்கள் சம்பவத்தன்று இரவு மிலிந்த் நாயக்கின் வீட்டிற்குள் சென்று தூங்கிக்கொண்டிருந்த அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் உடலை வீட்டின் வெளியே வீசிவிட்டு சென்றுள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கூலிப்படையினர் கைது

இதுபற்றி அறிந்த ஸ்ரீகாந்த் நவிமும்பைக்கு தப்பியோடி விட்டார். ஆனால் போலீசார் அவர் தலைமறைவாக இருந்த இடத்தை கண்டுபிடித்து கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில், இந்த கொலையில் தொடர்புடைய கூலிப்படையை சேர்ந்த நாகராஜ்(19), மகேஷ்(19), சிந்தாராம்(19), ராஜூ சிங்கே(20) ஆகிய 4 பேரையும் கர்நாடக மாநிலம் குல்பர்காவில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மிலிந்த் நாயக்கின் மனைவியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Powered by Blogger.