Header Ads

ஓரின சேர்க்கை: மலேசிய எதிர்க்கட்சி தலைவருக்கு 5 ஆண்டு சிறை

மலேசியா பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் அன்வர் இப்ராகிம் (66). இவர் மற்றொரு ஆணுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து இவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மலேசியாவில் வருகிற 2018–ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில் போட்டியிட்டு பிரதமராகி விடலாம் என்ற கனவில் இருந்தார்.

தற்போது 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே இவரது எதிர்கால பிரதமர் கனவு தகர்ந்தது.

No comments:

Powered by Blogger.