Header Ads

மலேசிய விமானம் மாயம்: செயற்கைகோள் மூலம் தீவிர தேடுதல்

பீஜிங்: மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பிட்ட விமானம் கடலுக்குள் விழுந்து மூழ்கியிருக்கலாம் என கருதப்படுவதால், பல்வேறு நாடுகளின் 40 கப்பல்களும், 22 விமானங்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், விமானம் மாயமாகி 4 நாட்கள் ஆகியும் அது குறித்த தகவல் இல்லை. இந்நிலையில் தேடுதல் பணியில் சீனா தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்காக, 10 செயற்கைகோள்களை பயன்படுத்தி வருகிறது. செயற்கை கோள்களில் பொருத்தப்பட்டுள்ள அதிக திறன் கொண்ட கேமராக்கள் மூலம் கடலின் கீழ் பரப்பில் விமானம் கிடக்கிறதா என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. மாயமான விமானத்தில் சீனர்கள் அதிகமாக பயணம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.