கோபத்தில் பாடலை வெளியிட்ட நடிகை!
விரல் வித்தை நடிகரும், ஒரு கல் நடிகையும் சமீபத்தில் தங்களது காதலை முறித்துக் கொண்டனர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இருவரும் இணைந்து நடித்த அந்த இரண்டெழுத்து படத்தின் பாடல்கள் இணையதளத்தில் வெளியாகிவிட்டதாம்.
யார் இந்த வேலையைச் செய்தார் என்று யோசித்து வரும் நிலையில், விரல் வித்தை நடிகர் மீதுள்ள கோபத்தால் ஒரு கல் நடிகைதான் இதை இண்டர்நெட்டில் வெளியிட்டிருக்கக்கூடும் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறதாம். எவ்வளவுதான் கோபம் இருந்தாலும் இந்த பொண்ணு இப்படியா பண்ணுவது என்று திரையுலகைச் சேர்ந்த பலரும் அவரை தூற்றி வருகிறார்களாம்.
No comments: