Header Ads

நாய்க்குட்டிகளால் காதலனை இழந்த இளம்பெண்....

வீடுகளில் செல்லமாக வளர்க்கப்படும் நாய்க்குட்டிகள் மீது சிலர் அபரிமிதமாக அன்பு செலுத்துவார்கள். இங்கிலாந்து நாட்டில் இதன் விளைவாக ஒரு இளம்பெண் தனது காதலனையே துறக்க நேரிட்டது.

லண்டனில் வசிக்கும் எம்மி ஸ்டீவென்ஸ்(25) என்ற பெண் தனது செல்லப்பிராணியாக 9 நாய்க்குட்டிகளை வளர்த்து வந்தார். இவருக்கு 30 காதலனும் உள்ளார்.

எம்மி தனது முழுநேர கவனத்தையும் இந்த செல்லப்பிராணிகளுக்காகவே செலவிட்டது மட்டுமின்றி, இந்த நாய்க்குட்டிகளுக்கு விதவிதமான உடைகள், நகைகள் அணிவிப்பது, வெவ்வேறு நிறத்தில் ‘டை’ அடிப்பது என்று அலங்கரித்து ரசிப்பார். இவை என்ன உணவு விரும்புகிறதோ அவற்றை வாங்கி கொடுப்பார்.

இந்த வகையில் மாதம் சுமார் ரூ.70 ஆயிரத்தை செலவிடுகிறார். இவற்றுக்காக வாங்கி குவித்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள ஆடைகள் அலமாரியில் ஆக்கிரமித்துள்ளன.

இந்த மோகம் பற்றி எம்மி கூறுகையில், ‘இந்த 9 நாய்க்குட்டிகளும் எனது குழந்தைகள். என் வருமானம் முழுவதையும் இவற்றுக்கு செலவிட தயாராக இருக்கிறேன்.

இதுவரையில் ரூ.30 லட்சத்தை செலவு செய்து விட்டேன். இவற்றை விட்டு என்னால் பிரிந்திருக்க முடியாது. இது என் காதலனுக்கு பிடிக்காததால் எங்கள் உறவு முறிந்து விட்டது’ என்கிறார்.

No comments:

Powered by Blogger.