Header Ads

நிமிர்ந்து நில்' க்கு செக்!

சமீபகாலமாக ஜெயம் ரவியின் மார்க்கெட் கீழ் தங்கிய நிலையில் தான் இருந்து வருகிறது.
ஆதிபகவன் படத்தோல்விக்கு பின் நிமிர்ந்து நில் திரைப்படம் ஜெயம் ரவிக்கு ஒரு மைல் கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.

சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி, அமலாபால் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்து இன்று ரிலீஸாக இருந்த இப்படம் பணச்சிக்கலினால் ரிலீஸ் ஆகவில்லை.

ஆரம்பத்திலிருந்தே நிதி சிக்கலில் தவித்து வந்த இப்படம் கடைசியாக மார்ச் 7ம் திகதி ரிலீஸ் என உறுதி செய்யப்பட்டது.

இப்படத்தின் தயாரிப்பாளர் கே.எஸ் சீனிவாசன் இதற்கு முன் தயாரித்த படங்களில் 4 கோடி வரை கடன் பாக்கி வைத்துள்ளதால் சம்பந்தபட்டவர்கள் கடன் பாக்கியை கொடுத்துவிட்டு இப்படத்தை ரிலீஸ் செய்யவதாக கூறியுள்ளனர்.

பல நெருக்கடி இருந்து வரும் நிலையில் இப்படம் நாளை ரிலீஸ் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Powered by Blogger.