Header Ads

போயிங் நிறுவன விமானத்தில் குறைபாடுகள்?

அமெரிக்காவின் சிகாகோ நகரில் செயல்பட்டு வரும் விமான நிறுவனமான ‘போயிங்’ தனது புதிய படைப்பாக ‘ட்ரீம் லைனர்’–787 என்று அழைக்கப்படும் பிரம்மாண்ட ரக விமானத்தை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. இவ்விமானங்களுக்கு இந்தியா, ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது. பல நாடுகளும் இப்புதிய ரக விமானத்தை ஆர்வமுடன் வாங்கி பயன்படுத்தி வருகின்றன.

ஆனால் இவ்விமானத்தின் பேட்டரியில் பழுது ஏற்பட்டு சில மாதங்களுக்கு முன்பு பெரிய சர்ச்சை உருவெடுத்தது. இந்நிலையில் மீண்டும் இவ்விமான நிறுவனம் மற்றுமொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இந்நிறுவனம் தற்போது உருவாக்கி வரும் 40 ட்ரீம் லைனர் விமானத்தின் இறக்கை பகுதிகளில் ரோமம் அளவில் சிறிய கீறல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இறக்கைகளை உற்பத்தி செய்யும்  ஜப்பான் நாட்டை சேர்ந்நத பிரபல நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு  போயிங் நிறுவன அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள இந்த தொழில்முறை சிக்கல்களால் போயிங் நிறுவனத்தினரால் சுமார் 100 விமானங்களை ஒப்படைவு செய்வதில் காலவிரயம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இக்குறைபாடு பற்றி போயிங் நிறுவனம் “விமான பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் விமானத்தில் இதுபோன்ற கீறல்கள் காணப்படவில்லை” என்றும்  விளக்கம் அளித்துள்ளது.

No comments:

Powered by Blogger.