பள்ளி மாணவிகள் 7 பேரை கற்பழித்த கல்லூரி பேராசிரியர் கைது
திருவனந்தபுரம் அருகே மங்களாபுரத்தில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் அனிருத்தன் (வயது 55) என்பவர் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார்.
கல்லூரியின் அருகில் ஒரு தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. 6–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை உள்ள அந்த பள்ளியில் ஏராளமான மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு இந்த பள்ளியில் 7–ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி மாலையில் தாமதமாக வீட்டுக்கு சென்றார். மேலும் அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் பெற்றோர் துருவி,துருவி விசாரித்தனர்.
அப்போது அந்த மாணவி அழுதுகொண்டே திடுக்கிடும் தகவலை கூறினார். பேராசிரியர் அனிருத்தன் தன்னை கல்லூரிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி அந்த பள்ளி நிர்வாகிகளிடம் புகார் கூறினார்கள்.
மேலும் மங்களாபுரம் போலீசிலும் அனிருத்தன் மீது புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பேராசிரியர் அனிருத்தனை கைது செய்தனர்.
விசாரணையில் பள்ளி மாணவிகள் 7 பேரை அவர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. பள்ளி முடிந்து செல்லும் மாணவிகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கல்லூரி வளாகத்துக்கு அழைத்துச் சென்று அவர் தனது காமஇச்சையை தீர்த்துக் கொண்டுள்ளார். விசாரணைக்கு பின் அனிருத்தன் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
No comments: