Header Ads

மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்திய கடற்படை இணைந்தது

கடந்த 4 நாட்களுக்கு முன்பு மாயமான மலேசிய விமானம், இந்தோனேசியா மற்றும் மலேசியாவிற்கு இடையிலான மலாக்கா ஜலசந்தி அருகே ரேடார் தொடர்பை இழந்ததாக அந்நாட்டு ராணுவம் தகவல் வெளியிட்டது.

இதையடுத்து மலேசியாவின் மேற்கு கடற்பகுதியில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையும் விமான மீட்பு பணியில் இணைந்துள்ளது.

காணாமல் போன விமானம் குறித்த தடயங்களை சேகரிக்க இந்திய கடற்படைக்கு சொந்தமான ருக்மினி என்ற ஜிசாட்-7 செயற்கைக்கோள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளுடன் இந்திய கடற்படையும் ஒருங்கிணைந்து கடற்கொள்ளை எதிர்ப்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வருவது வழக்கமாகும். இந்நிலையில், கடற்சட்ட விதிகளின்படி இந்திய கப்பல்கள் அங்கு தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுகிறது. பரபரப்பான கடற்போக்குவரத்து மிகுந்த மலாக்கா ஜலசந்தியில் பல நாடுகளின் கடற்படைகள் ரோந்து பணியில் இருந்தாலும் நமது இந்திய கடற்படைதான் அங்கு வலுவான முன்னிலையில் உள்ளது.

2013ல் இயக்கத்திற்கு வந்த ருக்மினி செயற்கைக்கோளை மீட்புப் பணியில் பயன்படுத்துவதன் மூலம் இந்திய கடற்படை தனது செயல்திறனுக்கான பாராட்டை பெற இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.