ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியிடம் உல்லாசம் போலீஸ்காரரை கைது செய்ய கோரி மனு
நெல்லை மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க செயலாளர் சைலஜா இன்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
சங்கரன்கோவில் அருகே உள்ள சண்முகநல்லூரை சேர்ந்தவர் செல்வி (வயது18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இவர் 11&ம் வகுப்பு படித்து வருகிறார். தேவர்குளம் ஆலமரத்து தெருவை சேர்ந்தவர் அஜீஸ். இவர் மணிமுத்தாறில் உள்ள பட்டாலியனில் போலீஸ்கார ராக பணியாற்றி வருகிறார்.
செல்வியும், அஜீஸ்சும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்வதாக கூறி அஜீஸ், செல்வியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். கடந்த 11&ந்தேதி தனது மோட்டார் சைக்கிளில் நெல்லை புது பஸ் நிலையத்திற்கு செல்வியை அழைத்து வந்த அஜீஸ் காதலியிடம் நமது காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
எனது பெற்றோர் 100 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கத்துடன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்கிறேன் என ஆசை வார்த்தை கூறி வருகின் றனர். ஆனால் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறி மோட்டார் சைக்கிளில் ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கு செல்வியை, அஜீஸ் அழைத்து சென்றுள்ளார்.
தப்பி ஓட்டம்
ஆனால் போகும் வழி யிலேயே அஜீஸ்க்கு ஒரு போன் வந்தது. அதில் «பசியவர்கள் அஜீசை அவதூறாக திட்டி யுள்ளனர். இதையடுத்து அவர் நடுரோட்டிலேயே தனது காதலியான செல்வியை தன்னந்தனியாக விட்டு விட்டு நைசாக நழுவி சென்று விட்டார்.
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியிடம் உல்லாசம் அனுபவித்த போலீஸ்காரர் அஜீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பெண்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
No comments: