காதலுக்கு எதிர்ப்பு: தூக்கு போட்டு காதல் ஜோடி தற்கொலை
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கீழத் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் ஆர்த்தி (வயது 17). வலங்கைமான் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். வலங்கைமான் அருகே உள்ள சித்தன் வாளூர் மேலமாதா கோவில் பகுதியை சேர்ந்தவர் கழவையன். இவரது மகன் குணசுந்தர் (17). இவர் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.
குணசுந்தரமும், ஆர்த்தியும் காதலித்து வந்தனர். இதனை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆர்த்தி தனது வீட்டில் இருந்து மாயமானார். அருகில் உள்ள கோவில் திருவிழாவுக்கு சென்று இருப்பதாக பெற்றோர் நினைத்தனர். ஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் ஆர்த்தியை பெற்றோர் தேடினார்கள்.
இந்த நிலையில் வலங்கைமானை அடுத்துள்ள தொழுவூர் சுள்ளான் ஆற்றுப்பகுதியில் உள்ள கருவேல மரத்தில் ஆர்த்தியின் துப்பட்டாவில் குணசுந்தரும், ஆர்த்தியும் தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்தனர்.
இதனை அங்குள்ள செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றவர்கள் பார்த்து வலங்கைமான் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் அங்கு விரைந்து சென்று இருவரின் பிணத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பிளஸ்–2 படிக்கும் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments: