கள்ளக்காதலுக்கு இடையூறு : கணவனை கொன்ற மனைவி
சேந்தமங்கலம், மார்ச் 10: நாமக்கல் மாவட்டம் புதுவளவு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னுசாமி (40), விவசாயி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பைல்நாடு பஸ் நிறுத்த பகுதியில் கை, கால் முறிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில், வாழவந்தி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில், சின்னுசாமியின் மனைவி ராஜலட்சுமி (35) க்கும், அதே பகுதியைச் சேர்ந்த லாரி அதிபர் கணேசன் (35) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையறிந்த சின்னுசாமி மனைவியையும், கணேசனையும் பல முறை கண்டித்துள்ளார். இந்நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை, கணேசனுடன் சேர்ந்து கொலை செய்ய ராஜலட்சுமி திட்டமிட்டார். அதன்படி, கள்ளக்காதலன் கணேசனும் அவரது நண்பர்கள் செல்வம் (38), ராஜரத்தினம் (37), ராஜேந்திரன் (33), ஆகியோர் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜலட்சுமி, கணேசன், செல்வம், ராஜரத்தினம், ராஜேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் கணேசனின் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
No comments: