தனது வருங்கால கணவர் குறித்து நடிகை இலியானா பேட்டி
தமிழில் கேடி படத்தில் அறிமுகமானவர் தெலுங்கு நடிகை இலியானா. நீண்ட இடைவெளிக்கு பின்பு இயக்குநர் சங்கரின் நண்பன் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்து உள்ளார். சமீபத்தில், தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து நடிகை இலியானா பேட்டியளித்து இருந்தார். எனது கணவர் வருண் தவான் போன்று இருக்க வேண்டும். அவர் வேறுபட்ட அளவில் இருக்கிறார் என்று தனிப்பட்ட முறையில் நான் உணர்கிறேன்.
அவருடன் எனது உணர்வுகளை நான் பகிர்ந்து கொண்டுள்ளேன். அவர் மிக அழகான, பக்குவமடைந்த மற்றும் எப்பொழுது என்ன பேச வேண்டும் என்பதை அறிந்தவர். அவரது தன்மைகள் எனது வருங்கால வாழக்கை துணைவரிடம் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ஷாகித் கபூர் ஆகியோருடன் நான் பணியாற்றியுள்ளேன்.
ஆனால், வருண் உடன் எனது கெமிஸ்ட்ரி வேறுபட்ட அளவில் ஒன்றிணைந்து உள்ளது என்று கூறியுள்ளார். (ரன்பீருடன் பர்பி மற்றும் படா போஸடர் நிக்லா ஹீரோ படங்களில் இலியானா இணைந்து நடித்துள்ளார்.) வருண் தவானுடன் மெய்ன் தேரா ஹீரோ படத்தில் இலியானா டி குரூஸ் இணைந்து நடித்துள்ளார். இந்த படம் வருகிற ஏப்ரல் 4ந்தேதி வெளிவர உள்ளது.
No comments: