வாய்தா மேல் வாய்தா... 160 வாய்தா
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதிலிருந்து 160 முறை வாய்தா கோரப்பட்டுள்ளது. இதில் 90 சதவீதம் ஜெயலலிதா தரப்பிலேயே வாய்தா கோரப்பட்டுள்ளது. வாய்தா வாங்கிய தேதியும், அதற்காக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தரப்பில் கூறப்பட்ட காரணங்களும் வருமாறு:
கடந்த 2005 முதல் 2009 வரை பெரும்பாலான நேரங்களில் வழக்கு கோப்புகள் மாற்றம், அரசு வக்கீல் நியமனம், வழக்கு ஆவணங்களை தமிழில் மொழிபெயர்ப்பு ஆகிய காரணங்களுக்காக வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. 2010 முதல் வழக்கின் உச்சக்கட்ட விசாரணை தொடங்க ஆரம்பித்தது.
2005: மார்ச் 14, 28, மே 16, 25, 27, 28, ஜூன் 4, 9, 21, 22, 23, 27, 29, ஜூலை 12, 16, 22, 23, 26, 27, ஆகஸ்ட் 2, 10, 26, அக்டோபர் 10, நவம்பர் 19.
2006: ஜூன் 3, ஜூலை 29, செப்டம்பர் 2, அக்டோபர் 28, நவம்பர் 25.
2007: பிப்ரவரி 3, மார்ச் 24, ஏப்ரல் 28, ஜூலை 21, செப்டம்பர் 22, அக்டோபர் 27, டிசம்பர் 15.
2008: பிப்ரவரி 2, ஏப்ரல் 5, மே 3, ஆகஸ்ட் 2, செப்டம்பர் 6, 27, நவம்பர் 3, டிசம்பர் 6.
2009: ஜனவரி 3, ஏப்ரல் 4, 30, மே 25, ஜூன் 16, ஜூலை 23, ஆகஸ்ட் 27, செப்டம்பர் 5, 10, அக்டோபர் 20, டிசம்பர் 19.
2010:ஜனவரி 31ம் தேதி சொத்து வழக்கை தொடர உரிய அனுமதி பெறவில்லை எனக் கூறி ஜெயலலிதா மனு தாக்கல். பிப்ரவரி 25ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
* மார்ச் 8ம் தேதி முதல் 26ம் தேதிக்குள் ஆஜராகுமாறு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
* மார்ச் 4ம் தேதி (அடுத்த நாள்) சம்மன் உத்தரவை மாற்ற வேண்டும் எனக் கோரி ஜெயலலிதா சார்பில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் அந்த மனுக்களை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
* இந்த தள்ளுபடி உத்தரவை எதிர்த்தும், சம்மன் அனுப்பப்பட்டதை எதிர்த்தும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மார்ச் 10ம் தேதி உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
* மார்ச் 19ம் தேதி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மறுநாளே அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
* சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணை அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி ஜெயலலிதா தரப்பில் 2010 ஏப்ரல் 8ம் தேதி ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
* அந்த மனு ஏப்ரல் 27ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
* இந்த மனு மே 5ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணக்கு வந்தபோது, நாங்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவிருப்பதால் மனுவை வாபஸ் பெறுகிறோம் என்று ஜெயலலிதா தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, அந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
* மே மாதம் குற்றப்பத்திரிகை நகலின் 3 செட்களை தனக்குத் தர வேண்டும் என்று ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
* ஜூலை 15ம் தேதி தனக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை நகலைத் தர வேண்டும் என்று ஜெயலலிதா ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
* ஜூலை 27ல் தனக்கும் மொழிபெயர்ப்பு நகல் வேண்டும் என்று சுதாகரனும் தன் பங்குக்கு ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
* இந்த மனுக்களை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், நகல்களைத் தர உத்தரவிட்டது. இதை எதிர்த்து அரசுத் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
* இந்த காலக்கட்டத்தில் நகல்களை அச்செடுக்கும் பணி நடைபெற்றதால் விசாரணை 5 முறை தள்ளிவைக்கப்பட்டது.
* அதன் பின்னர் மொழி பெயர்ப்பாளரை குறுக்கு விசாரணை செய்யக் கோரி ஜெயலலிதா சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவையும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
* இந்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை உயர் நீதிமன்றம் நவ. 23ம் தேதி தள்ளுபடி செய்தது.
* இதையடுத்து, டிசம்பர் 16ம் தேதி விசாரணைக்காக சாட்சிகள் ஆஜராகுமாறு அவர்களுக்கு சம்மன் அனுப்ப நவம்பர் 30ம் தேதி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
* சாட்சி விசாரணை நடத்தக் கூடாது என்று உத்தரவிடக்கோரி ஜெயலலிதா சார்பில் 4 மனுக்கள் ஜனவரி 3ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு அன்றைய தினமே தள்ளுபடியும் ஆனது.
* 2011 ஜனவரி 4ம் தேதி மேலும் 2 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. அன்றைய தினம் ஒரு வித்தியாசமான மனு சுதாகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
* அந்த மனுவில், தனக்கு ஆஜராகும் வக்கீல் ஒருவரின் தந்தை காலமாகிவிட்டதால் விசாரணையை 3 வாரங்கள் தள்ளிவைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. எனினும், மனுக்கள் ஜனவரி 18ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன.
* ஜனவரி 27ம் தேதி குற்றப்பத்திரிகையில் உள்ள தவறுகளை கண்டுபிடிப்பதற்காக 6 மாதம் விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும் என்று கோரி ஜெயலலிதாவும் மற்ற 3 பேரும் சிறப்பு நீதிமன்றத்தில் 2 மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
* அதோடு, ஒரு சில தவறுகளைக் குறிப்பிட்டும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அந¢த மனுக்கள் ஜனவரி 29ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன. அந்த தள்ளுபடி உத்தரவில் தவறு இருந்தால் மொழிபெயர்ப்பாளரிடம் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.
* இந்த உத்தரவால் குற்றவாளிகள் ஒவ்வொரு சாட்சி விசாரணையின்போதும் தவறுகள் உள்ளது என்று சொல்லி விசாரணையை இழுத்தடிப்பார்கள் என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.
* இதையடுத்து, பிப்ரவரி 14ம் தேதி மேலும் ஒரு சாட்சியத்தில் தவறு இருப்பதாக ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு பிப்ரவரி 19ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
* பிப்ரவரி 19ம் தேதி வழக்கை மேலும் 4 வாரங்கள் தள்ளிவைக்கக் கோரி ஜெயலலிதா சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் சாட்சிகளை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
* மார்ச் 9ம் தேதி மொழிபெயர்ப்பில் தவறு உள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடியானதை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
* இதை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம் விசாரணை பிப்ரவரி 26ம் தேதி நடைபெறும் என்று உத்தரவிட்டது.
* மொழிபெயர்ப்பு தவறு குறித்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மொழி பெயர்ப்பில் உள்ள தவறு குறித்து 10 நாட்களுக்குள் மொழிபெயர்ப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும். அவர் 20 நாட்களில் அந்த தவறுகளை சரிசெய்து தர வேண்டும் என்று கூறப்பட்டது. வழக்கு விசாரணை ஏப்ரல் 13ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
* ஆனால், தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவிருப்பதால் தேர்தல் முடிந்த பிறகு விசாரணையை வைத்துக்கொள்ளலாம் என்றும் விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
* மே 16ம் தேதி முக்கிய சாட்சியான ஆடிட்டர் பாலாஜியை மீண்டும் விசாரிக்கக்கோரி ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு ஜூன் 3ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
* வக்கீலின் தந்தை காலமானதால் விசாரணையைத் தள்ளிவைக்க கோரிய மனுவை உயர் நீதிமன்றம் ஜூன் 3ம் தேதி தள்ளுபடி செய்தது.
* ஜூன் 6ம் தேதி சசிகலா சார்பில் பாலாஜியை விசாரிக்கக் கோரி ஒரு மனு தாக்கல் செய்ய்பட்டது. அந்த மனு அன்றைய தினமே தள்ளுபடியானது.
* இதற்கிடையே, தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா முதல்வர் ஆனார். இதனால் வழக்கின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது.
* லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் என்.டி.நாணைய்யா என்ற வக்கீல் நியமிக்கப்பட்டார். அவர், நீதிமன்றத்தில் வக்காலத்தும் தாக்கல் செய்தார். ஆனால், புதிய வக்கீல் நியமிக்கப்பட்ட விவகாரம் அரசு வக்கீலுக்கு தெரிவிக்கவில்லை.
* தான் புதிய வக்கீலை நியமிக்கப் போவதாகவும் அதற்கு 4 வாரம் கால அவகாசம் தர வேண்டும் எனக் கோரி ஜெயலலிதா ஜூன் கடைசி வாரத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஜூலை 18ம் தேதிவரை கால அவகாசம் கேட்டிருந்தார்.
* வழக்கு ஜூலை 14ம் தேதி விசாரணைக்கு வந்தபோது கால அவகாசம் கேட்டு மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
* விசாரணையை நீதிபதி ஜூலை 27ம் தேதிக்குத் தள்ளிவைத்தார். குற்றவாளிகளிடம் கேள்வி கேட்டு பதிலை பதிவு செய்யும் விசாரணைக்காக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, ஜூலை 27ல் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 313ன் கீழ் நீதிபதி கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
No comments: