பண நெருக்கடியால் விபசாரத்தில் ஈடுபட்டேன் நடிகை ஸ்வேதா பாசு கண்ணீர்
விபசாரத்தில் ஈடுபட்டதாக தெலுங்கானா போலீசிடம் சிக்கியவர் பிரபல இந்தி நடிகை ஸ்வேதாக பாசு என்பது தெரிய வந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள பஞ்சரா ஹில்ஸ், சினிமா பிரபலங்கள் குடியிருக்கும் பகுதியாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை, இங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரபல நடிகை ஒருவர் விபசாரத்தில் ஈடுபடுவதாக ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் விபசாரத்தில் ஈடுபட்ட அந்த நடிகையையும், அவருக்கு இடைத் தரகராக செயல்பட்ட துணை இயக்குனர் பாலு என்பவரையும் கைது செய்தனர். இதையடுத்து, கைதான நடிகை பெண்கள் மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
எனினும், தாங்கள் கைது செய்த பிரபல நடிகை யார் என்பதையோ, பிடிபட்ட தொழில் அதிபரின் பெயரையோ போலீசார் வெளியிடவில்லை. கொல்கத்தாவைச் சேர்ந்த அந்த நடிகை விபசாரத்துக்காக ரூ.1 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாகவும் அதில் நடிகைக்கு ரூ.15 ஆயிரத்தை மட்டுமே கொடுத்துவிட்டு மீதியை துணை இயக்குனர் பாலு வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் விபசாரத்தில் ஈடுபட்ட அந்த நடிகை யார் என்பது தெரியவந்துள்ளது.
இது பற்றி தெலுங்கு இணைதளங்கள் படத்துடன் பரப்பு செய்தி வெளியிட்டுள்ளன. விபசாரத்தில் ஈடுபட்டதாக கைதான அந்த நடிகையின் பெயர் ஸ்வேதா பாசு. பிரபல இந்தி நடிகை ஆவார். மகாதே மற்றும் இக்பால் ஆகிய இந்திப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ்பெற்றவர். ஏராளமான தெலுங்கு படங்களிலும் தமிழில் ராரா, ரகளை, சந்தமாமா ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார்.
விபசாரத்தில் தான் தள்ளப்பட்டது என்பது குறித்து, ஸ்வேதா பாசு அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தையும், தெலுங்கு இணையதளங்கள் வெளியிட்டு உள்ளன.
அதில் அவர் கண்ணீர் மல்க கூறியிருப்பதாவது:-
கடந்த சில மாதங்களாகவே எனக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. இதனால் செலவுக்கு பணமின்றி மிகுந்த நெருக்கடிக்கு ஆளானேன். இந்த நேரத்தில் பணத்தேவைக்காக சில தவறான படங்களை தேர்வு செய்தும் நடித்தேன்.
எனது குடும்பத்தைக் காப்பாற்ற நான் சம்பாதித்து கொடுக்கவேண்டிய நிலையும் எனக்கு இருந்தது. எனவே பணம் சம்பாதிப்பதற்கு இதைவிட்டால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால்தான் விபசாரத்தின் மூலம் பணம் சம்பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். என்னால் இதில் இருந்து விடுபடவும் முடியவில்லை.
சினிமாவில் இதுபோன்ற விஷயங்கள் பொதுவான ஒன்றாகிவிட்டது. பிரபல நடிகைகளில் பலர் விபசாரத்தில் ஈடுபடுவது எனக்குத் தெரியும். என்னைப் போலவே பல பெண்கள் இந்த பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
நடிகை ஸ்வேதா பாசு, ஐதராபாத்தில் முதல் முறையாக பிடிபடுவதற்கு முன்பே விபசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் விபசாரத்தில் ஈடுபடுவதை முக்கிய பிரமுகர் தெரிந்து வைத்துள்ளனர்.
இதையறிந்த தெலுங்கு டி.வி.சேனல் ஒன்று ரகசிய நடவடிக்கையில் இறங்கியபோது தான் அவர் கையும், களவுமாக போலீஸ் வலையில் சிக்கியதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
No comments: