கடைசிவரை வரவே இல்லை ரஜினி, கமல், விஜய், அஜீத்... எல்லா முன்னணி நடிகைகளும் ஆப்சென்ட்!
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை ஜெயலலிதாவை ஆதரித்து இன்று திரையுலகம் நடத்திய உண்ணாவிரதத்தில் கடைசி வரை முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொள்ளவில்லை. முன்னணி நடிகைகள் என்று சொல்லப்படும் ஒருவர் கூட சேப்பாக்கம் உண்ணாவிரதப் பந்தல் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. தமிழ் திரையுலகின் அத்தனை சங்கங்களும் இன்றைய உண்ணாவிரதத்தில் பங்கேற்றன. பங்கேற்ற திரையுலக பிரபலங்கள்: தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி சிவா, கலைப்புலி தாணு, கேடி குஞ்சுமோன், இயக்குநர் சிராஜ், நடிகர் தியாகு, ராமராஜன், டி அருள்பதி, கே ஆர் செல்வராஜ், குண்டு கல்யாணம், விக்ரமன், காஜா மொய்தீன், ஜேகே ரித்தீஷ், வேல் முருகன், சுரேஷ் காமாட்சி, ஆர் கே செல்வமணி, மனோபாலா, தேவா, சச்சு, சங்கர் கணேஷ், கே பாக்யராஜ், இப்ராகிம் ராவுத்தர் நளினி, கவிதாபாரதி, ஏ எல் அழகப்பன், ராகராஜன் ராஜா, சித்ரா லட்சுமணன், டெல்லி கணேஷ், ஸ்டன்ட் தவசி, அதியமான், கலைப்புலி சேகரன், ஆர்வி உதயகுமார், பி வாசு, ஸ்ரீகாந்த், சரத்குமார், வெண்ணி்ற ஆடை நிர்மலா, செந்தில், ஆர் கே சண்முகம், கேயார், மன்சூர் அலிகான், எஸ் ஏ சந்திரசேகரன், கலைப்புலி சேகரன், நிழல்கள் ரவி, அஜய் ரத்னம் ரமேஷ் கன்னா, பிரவீன் காந்த், எஸ் ஜே சூர்யா, பெப்சி விஜயன், வையாபுரி, எம்எஸ் பாஸ்கர், சிங்க முத்து, சவிதா, அனு மோகன், அபிராமி ராமநாதன், விவேக், மயில்சாமி, சிஆர் சரஸ்வதி, ஆர்த்தி, சத்யராஜ், சத்யஜோதி தியாகராஜன், பிரபு, விக்ரம் பிரபு சிபிராஜ், ரவிமரியா, பாத்திமா பாபு, ஜாகுவார் தங்கம், நரேன், சினேகன், முக்தா சீனிவாசன், கே முரளிதரன், சவுந்தர்ராஜன், கல்யாண், சக்தி, லியாகத் அலிகான், சேரன், தரணி, குட்டி பத்மினி ரவி கொட்டாரக்கரா, புஷ்பா கந்தசாமி, புனேஸ்வரி, சிங்கம்புலி, விபி கலைராஜன் எம்எல்ஏ, தேமுதிக எம்எல்ஏ சுந்தரராஜன், இயக்குநர் லிங்குசாமி. முன்னணி கலைஞர்கள் என்று பார்த்தால், சூர்யா, விக்ரம், கார்த்தி, சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, இயக்குநர் பாலா என சிலர் மட்டுமே வந்திருந்தனர். இவர்களில் சிவகார்த்திகேயன் மட்டும் பிற்பகலில் வந்து மாலை வரை அமர்ந்திருந்தார். மற்றவர்கள் பத்துப் பதினைந்து நிமிடம் இருந்துவிட்டு கிளம்பினர். ரஜினி, கமல், விஜய், அஜீத், சிம்பு, தனுஷ் போன்றவர்களில் யாராவது வரக்கூடும். கமல் உள்ளூரிலேயே இருப்பதால் அவராவது வருவார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது. ஆனால் மாலை 5 மணி வரை யாரும் வரவில்லை. வந்திருந்த நடிகைகளில் ஒருவர் கூட இப்போது ஃபீல்டில் இல்லை. அல்லது வயதானவர்கள். இப்போது பிரபலமாக, முன்னணியில் உள்ள ஒருவர் கூட இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்கவில்லை. இத்தனைக்கும் உண்ணாவிரதத்துக்கு தலைமையே நடிகர் சங்கத் தலைவரான சரத்குமார்தான்!
No comments: