அஜீத்துக்காக 3 தலைப்புகளை தேர்வு செய்த கௌதம்மேனன்
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத்தின் 55-வது படமாக உருவாகி வரும் பெயரிடப்படாத புதிய படத்தில் அஜீத் போலீசாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா இருவரும் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தில் அஜீத் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதால் படத்திற்கு ‘சத்யா’ என்று பெயர் வைத்திருப்பதாகவும், போலீஸ் ஸ்டோரி என்பதால் ‘ஆயிரம் தோட்டாக்கள்’ என பெயர் வைத்திருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், படக்குழுவினரோ இந்த தலைப்புகளை உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில், இந்த படத்துக்காக கௌதம் மேனன் 3 தலைப்புகளை தேர்வு செய்து, அதை பதிவு செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்புகள் முடிவடையவுள்ள நிலையில், விரைவில் இப்படத்துக்கான தலைப்பை வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
No comments: