ஹாங்காங்கில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மான் கைது ?
இலங்கையில் 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி போர் முடிவுற்ற நேரத்தில், தலைவர் பிரபாகானின் உடல் என்று ஒன்றைக் காட்டிய, இலங்கை இராணுவம், அவரை தாம் கொன்றுவிட்டதாக அறிவித்தது. இதனை எவரும் நம்பவில்லை. ஆனால் கடைசி வரை புலிகளின் 2ம் நிலை தலைவர் பொட்டம்மான் குறித்து எந்த ஒரு தகவலையும் இலங்கை இராணுவம் இதுவரை வெளியிடவே இல்லை. அவருக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியாத ஒரு நிலை காணப்படுகிறது. இன் நிலையில் சிங்கள ஒட்டுக் குழுவோடு இணைந்து இயங்கும் சில தமிழ் இணையத்தளங்கள், பொட்டம்மான் ஹாங்காங் நாட்டிற்கு தப்பிச் சென்றதாகவும், ஆனால் அவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளதகவும் தகவல் வெளியிட்டுள்ளார்கள்.
ஹாங்காங் நாட்டில் இருந்து அன் நாட்டு பொலிசாரின் உதவியோடு பொட்டம்மானை இலங்கைக்கு கொண்டு வர மகிந்த ராஜபக்ஷ முயற்சி எடுத்துள்ளதாக இந்த சிங்கள அடிவருடி இணையங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. இவை சிங்கள இணையங்களிலும் வெளியாக ஆரம்பித்துள்ளது. இதனால் என்ன நடக்க இருக்கிறது என்று சற்று பார்ப்போம். இலங்கையின் அரசியல் அமைப்பு சட்டப்படி, ஒரு ஜனாதிபதி 3ம் தடவை போட்டியிட முடியாது. 2 தடவைகளே ஜனாதிபதியாக இருக்க முடியும். ஆனால் மகிந்த ராஜபக்ஷ 3ம் முறையும் ஜனாதிபதியாக போட்டியிட உள்ளார். ஆனால் சிங்கள மக்களுக்கு இடையே இதற்கு சற்று எதிர்பு கிளமியுள்ளது. விடுதலைப் புலிகளை வென்று அவர் என்ன தான் செல்வாக்கோடு இருந்தாலும், இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தை அவர் மீறுவதை பழமையான சிங்கள மக்கள் விரும்பவில்லை.
இதனால் அவர் அப்படி போட்டியிட முடியாது என்று பல சிங்கள கட்சிகளும், பழமையான சிங்கள அரசியல்வாதிகளும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இன் நிலையில் சரிந்துபோயுள்ள அவரது செல்வாக்கை கட்டி எழுப்பவும், மகிந்தர் 3 வது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஏதுவாக இந்தச் செய்தி, சிங்கள புலனாய்வுத்துறையால் திட்டமிட்ட வகையில் பரப்பப்பட்டுள்ளது. இதனை சில தமிழ இணையங்கள் , வெளியிட்டும் உள்ளது. மேலும் சில இணையங்களை சிங்கள புலனாய்வுப் பிரிவினர் இயக்கி வருவதால் அதிலும் இச் செய்தி வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
No comments: