ஐ படத்தின் டிரைலர் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியீடு
விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஐ’. நீண்டகால தயாரிப்பில் இருந்துவரும் இப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். எமிஜாக்சன், சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்திற்காக விக்ரம் தனது உடல் எடையை கூட்டி, குறைத்து மிகவும் சிரத்தை எடுத்து நடித்துள்ளார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டை வருகிற செப்டம்பர் 15-ந் தேதி வைத்துள்ளனர். பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மற்றும் ஜாக்கிசான் ஆகியோர் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
இவ்வளவு பிரம்மாண்டத்துடன் தயாராகிவரும் இப்படத்தின் டிரைலரை சமீபத்தில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தனக்கு நெருக்கமானவர்களிடம் போட்டு காண்பித்துள்ளார். அந்த டிரைலரை பார்த்த அனைவரும் வியந்து போயினர்.
இன்னும் வெளிவராத இந்த டிரைலர் தற்போது இணையதளத்தில் திருட்டுத்தனமாக பரவி வருகிறது. டிவியில் திரையிட்டு காட்டப்படும் அந்த டிரைலரை ஒருவர் செல்போனில் திருட்டுத்தனமாக படம்பிடித்து வெளியிட்டுள்ளார். இதையறிந்த படக்குழுவினர் தற்போது அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
No comments: