ஜெ.,வை விடுதலை செய்ய கோரி தமிழ்திரையுலகம் நாளை ஸ்டிரைக்! -
சொத்து குவிப்பு வழக்கில், 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை, விடுதலை செய்யக்கோரி தமிழ் திரையுலகம் சார்பில் நாளை(செப்., 30ம் தேதி) ஒருநாள் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் திரையரங்குகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் இதுதொடர்பாக நாளை உண்ணாவிரத போராட்டாம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. அநேகமாக தயாரிப்பாளர்கள் சங்க வளாகத்தில் இது நடக்கலாம் என தெரிகிறது. இதில் நடிகர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெப்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். -
No comments: