Header Ads

ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த விஜய்!

மீப காலமாக ஒருவர் பிடிக்கவில்லை என்றால் அவர்களைப் பற்றி அவதூறு செய்தி பரப்புவது, கலாய்ப்பது போன்ற விசயங்களில் ரசிகர்கள் தாறுமாறாக இறங்கி விடுகிறார்கள். அந்த வகையில் விஜய்-அஜீத் ஆகிய இருவரின் ரசிகர்கள் இணையதளங்கள் வாயிலாக மோதிக்கொள்வது வாடிக்கையான ஒரு விசயமாகி விட்டது. 

இந்த நிலையில், இணையதளங்கள் ரசிகர்களிடம் தொடர்பு வைத்துள்ள, நடிகை குஷ்பு, டைரக்டர் வெங்கட்பிரபு ஆகியோரை சமீபத்தில் விஜய் ரசிகர்கள் அதிகமாக கலாய்த்து வருகிறார்களாம். அதனால் இதுபற்றி குஷ்புவே விஜய்யிடம் புகார் அளித்திருக்கிறாராம். அதையடுத்து அஞ்சான் பட விவகாரத்தில் டைரக்டர் லிங்குசாமியை கண்டபடி விமர்சித்து வந்த ரசிகர்களை ஆப் பண்ணும் முயற்சியாக டைரக்டர் வெங்கட்பிரபு, ஒரு கலைஞனை கலாய்ப்பதற்கும் அளவு இருக்கிறது.என்று சொல்லி இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என்று சில நாட்களுக்கு முன்பு ஒரு ஸ்டேட்மென்ட் விட்டிருந்தார். ஆனால் அதையடுத்து லிங்குசாமியுடன் சேர்த்து வெங்கட்பிரபுவையும் கண்டபடி கலாய்த்து வருகிறார்கள்.


இந்த விசயமும் இப்போது விஜய்யின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறதாம். அதனால் தனது ரசிகர் மன்றத்தினரை அழைத்து, இதுபோன்ற தவறான விமர்சனங்களில் இறங்கினால் ரசிகர் மன்றமே இருக்காது, கலைத்து விடுவேன் என்று எச்சரித்துள்ளாராம் விஜய். ஏற்கனவே தனது ரசிகர் மன்றத்தினர் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவு அளித்த விவகாரத்தை கேள்விப்பட்டதும் தனது ரசிகர் மன்றங்களை அஜீத் கலைத்து விட்டதால், அதேபோல் தளபதியின் கோபத்துக்கு ஆளாகி விடக்கூடாது என்று விஜய் ரசிகர் மன்றங்கள் வாலை சுருட்டிக்கொண்டு அமைதி காத்து வருகின்றன. 

No comments:

Powered by Blogger.