ஜெயலலிதாவை சிறையில் அடைத்ததால் லால்குடி கல்லூரி மாணவி தற்கொலை
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதால் மனம் உடைந்த கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுக்கோட்டை பிரமுகர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகள் ஜோனஷா (வயது 19). இவர் லால்குடியில் உள்ள பாரதிதாசன் உறுப்பு கல்லூரியில் பி.ஏ. 2–ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பெங்களூர் நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய செய்தியை தொலைக்காட்சியில் ஜோனஷா பார்த்துள்ளார். அப்போது ‘எங்களுக்கெல்லாம் இலவச லேப்–டாப் கொடுத்தவரை சிறையில் அடைத்து விட்டார்களே’ என கூறி அழுதாராம்.
இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த ஜோனஷா இரவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து லால்குடி இன்ஸ்பெக்டர் செல்வதாசன், சப்–இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர்.
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதால் மனம் உடைந்து ஜேனஷா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி
No comments: