அஜீத் படத்திற்கு டைட்டில் ரெடியாகி விட்டதாம்!
ஆரம்பம் படத்தில் இருந்தே அஜீத் படங்களுக்கு உடனடியாக தலைப்பு சொல்வதில்லை என்ற ஒரு சபதத்தை எடுத்துள்ளார்கள், அவரை வைத்து படம் பண்ணும் இயக்குனர்கள். இதில் வீரம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா மட்டும் பூஜை அன்றே வீரம் என்ற தலைப்பினை தில்லாக அறிவித்தார்.
ஆனால், இப்போது அஜீத்தின் 55வது படத்தை இயக்கி வரும் கெளதம்மேனன், ஆரம்பத்தில் ஆயிரம் தோட்டாக்கள் என்ற பெயரை வைத்திருப்பதாக இலைமறை காய்மறையாக சொன்னார். ஆனால் அதற்கு அஜீத் என்ன சொன்னாரோ, அதன்பிறகு டைட்டீல் பற்றி அவர் வாயை திறக்கவே இல்லை. தற்போது, படம் இறுதிகட்டத்தை எட்டி விட்டது.
முதலில் புலனாய்வு செய்யும் அஜீத் - அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியவர், இப்போது ரொமான்டிக் ரோலில் நடிக்கும் யூத் அஜீத்-த்ரிஷா பங்குபெறும் காட்சிகளை படமாக்கிக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில், படத்தில் அஜீத் நடிக்கும் சத்யதேவ் என்ற கேரக்டரின் பெயரை படத்திற்கு வைக்கவில்லை என்று தற்போது தெரிவித்துள்ளார் கெளதம்மேனன்.
அதேசமயம், இப்போதைக்கு என்ன டைட்டீல என்பதை அவர் சொல்லப்போவதாகவும் இல்லையாம். அப்படியென்றால் எப்போதுதான் சொல்வதாக உத்தேசம்? என்று கேட்டால், டிசம்பர் மாதம் படத்தை வெளியிடும் வேலைகள் துரிதமாக நடக்கிறது. அதனால் நவம்பரில் ஆடியோவை வெளியிட்டு அப்போது படத்தின் பெயரையும் வெளியிடலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று சொல்லும் கெளதம்மேனன், படத்திற்கு டைட்டீல் என்ன என்பதை ஏற்கனவே அஜீத்துடன் கலந்து பேசி முடிவு செய்து வைத்து விட்டேன் என்கிறார்.
No comments: