கத்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஏ.ஆர்.முருகதாஸ்-அனிருத்?
விஜய்-சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘கத்தி’ படத்தில் செல்பிபுள்ள என்ற பாடலை விஜய் பாடியுள்ளார். அனிருத் இசையில் வெளிவந்துள்ள இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இப்பாடலை மிகவும் சிறப்பாக படமாக்க வேண்டும் என்று விரும்பிய படக்குழு, மும்பை பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட அரங்கு அமைத்து ஷூட்டிங் நடத்தியுள்ளனர். இப்பாடலில் விஜய்யும், சமந்தாவும் 100 நடனக்கலைஞர்களுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளனர்.
கத்தி படத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ள படக்குழு, விஜய்யின் ‘செல்பிபுள்ள’ பாடலுக்கு மட்டும் சிறப்பு கவனம் செலுத்தி படமாக்கியுள்ளனர். இந்தப் பாடலில் ஏ.ஆர்.முருகதாஸ்-அனிருத் இருவரும் சிறப்பு தோற்றத்தில் தோன்றியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
ஏற்கனவே துப்பாக்கி படத்தில் விஜய் பாடிய ‘குகூள்...’ பாடலில் முருகதாஸ் சிறப்புத் தோற்றத்தில் தோன்றியிருந்தார்.
No comments: