Header Ads

ஜீவாவை புலம்ப விட்ட மெட்ராஸ்!

பெரும்பாலும் கதைகளை அத்தனை எளிதில் ஜட்ஜ் பண்ணி விட முடியாது. இந்த கதை வெற்றி பெறும் என்று நம்பி நடிப்பார்கள். ஆனால் அது ப்ளாப்பாகி விடும். ஆனால், துளியும் நம்பிக்கை இல்லாமல் நடிக்கிற சில படங்கள் மெகா ஹிட்டாகி விடும். அப்படி பல படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.


அதாவது, பாலா இயக்கிய சேது படத்தில் முதலில் விக்னேஷ்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த கதை பிடிக்கவில்லை என்று தவிர்த்தார். அதன்பிறகுதான் விக்ரம் நடித்தார். படமோ சூப்பர் ஹிட்டாகி விட்டது. விக்ரமுக்கு பெரிய அடையாளமாக அமைந்தது. அதேபோல், சசிகுமார் இயக்கி நடித்த ''சுப்ரமணியபுரம்'' படத்தில் நடிக்க முதலில் சாந்தனுவைத்தான் கேட்டனர். கதையைக்கேட்ட கே.பாக்யராஜ். என்ன இது ஒரே வெட்டு குத்தா இருக்கு என்று படததை தவிர்த்தார். ஆனால், அதன்பிறகு ஜெய் அந்த படத்துக்கு ஒப்பந்தமாகி நடித்தார். அநத படமும் சூப்பர் ஹிட்டானது. அப்படித்தான் பல சமயங்களில் சினிமாவில் நிகழ்ந்திருக்கிறது. 


அதே நிலைமை தற்போது ஜீவாவுக்கும் ஏற்பட்டிருக்கிறது. தற்போது கார்த்தி நடித்து வெளியாகியிருக்கும் மெட்ராஸ் படத்தின் கதையை முதலில் ஜீவாவிடம்தான் சொன்னார் அப்படத்தை இயக்கியுள்ள அட்டகத்தி ரஞ்சித். ஆனால், கதையில் எனக்கு பெரிதாக ஸ்கோப் இல்லையே. கதையில் வரும் செகண்ட் ஹீரோவுககுத்தான் முக்கியத்துவம் உள்ளது என்று சொல்லி நடிக்க மறுத்து விட்டாராம்.


அதன்பிறகுதான் அந்த கதையை கார்த்தியிடம் சொல்லி ஓ.கே பண்ணியிருக்கிறார் ரஞ்சித். ஆனால், இப்போது படம் ஓரளவுக்கு ஹிட்டாகியிருக்கிறது. அதனால், அவசரப்பட்டு நல்ல படத்தை தவிர்த்து விட்டோமே என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் ஜீவா.

No comments:

Powered by Blogger.