இன்டர்நெட்டில் என் தலையை ஒட்டி போலி நிர்வாண படம்: தமன்னா ஆவேசம்
சினிமாவில் ‘மார்பிங்’ தொழில்நுட்பம் முக்கியத்துவம் உள்ளதாக மாறி உள்ளது. ஆனால் அதை தவறாக பயன்படுத்தும் போக்கும் அதிகரித்துள்ளது. குடும்ப பெண்களை விஷமிகள் மார்பிங்கில் ஆபாசமாக சித்தரித்து இன்டர்நெட்டில் பரவவிடுகின்றனர். இதனால் அவர்கள் வாழ்க்கை சின்னாபின்னமாகி விடுகிறது.
தமன்னா படமும் இதுபோல் மார்பிங்கில் ஆபாசமாக மாற்றி வெளியிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமன்னா கூறியதாவது:–
மார்பிங்கில் நிறைய பெண்களின் படங்களை ஆபாசமாக மாற்றி வெளியிடுகின்றனர். இதனால் அந்த பெண்கள் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். ‘மார்பிங்’ படங்களை வைத்து பெண்களை வக்கிர புத்தியுள்ள ஆண்கள் பிளாக்மெயிலும் செய்கின்றனர்.
எனது படத்தையும் இதுபோல் வெளியிட்டு இருப்பதாக கேள்விப்பட்டேன். என் ஒரிஜினல் படத்தில் இருந்து எனது தலையை மட்டும் வெட்டி எடுத்து நிர்வாண பெண்ணின் உடம்போடு மார்பிங் மூலம் இணைத்து வெளியிட்டுள்ளனர்.
நான் இதற்கு எதிராக புகார் செய்யப்போனால் பிரச்சினை பெரிதாகிவிடும். அமைதியாக இருக்கிறேன் என்பதற்காக இது போன்ற அநாகரீக செயல்களை ஆதரிக்கிறேன் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த குற்றங்களை செய்யும் புல்லுருவிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கும் அக்கா, தங்கை உள்ளனர். அவர்களுக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டால் எவ்வளவு மன உளைச்சல் ஏற்படும் என்பதை உணர வேண்டும்.
இவ்வாறு தமன்னா கூறினார்.
No comments: