ஜெ.,க்கு ஜாமின்: ஐகோர்ட்டில் மனு?
சென்னை: சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை ஜாமினில் வௌியில் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளில் அ.தி.மு.க,. பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஜெ.,க்கு கர்நாடகா ஐகோர்ட்டில் தான் ஜாமின் மனு தாக்கல் செய்ய வேண்டும். தசரா விடுமுறை என்பதால், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டும் தான் ஐகோர்ட் சிறப்பு அமர்வு கூடும். இந்நிலையில், வரும் செவ்வாய்கிழமை ஜெயலலிதாவிற்கு ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகா ஐகோர்ட் சிறப்பு அமர்வு, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தால், அடுத்த கட்டமாக சுப்ரீம் கோர்ட்டில் தான் ஜாமி்ன் கோரி மனு தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: