காஜல் நடித்த ஆபாச காட்சி வெட்டி தள்ளிய சென்சார்
சென்னை: காஜல் நடித்த படுகவர்ச்சியான காட்சிகளை சென்சார் அதிகாரிகள் வெட்டித் தள்ளினர்.கமர்ஷியல் முலாம் என்ற பெயரில் சமீபகாலமாக ஹீரோயின் கவர்ச்சி காட்சிகள் தூக்கலாக படங்களில் இடம்பெறுகிறது. இழுத்துபோர்த்திக்கொண்டு நடித்துவந்த சமந்தா ‘அஞ்சான் படத்தில் டு பீஸ் நீச்சல் உடையில் நடித்தார். ‘டி டே என்ற இந்தி படத்தில் படுக்கை அறை காட்சியில் ஸ்ருதி நடித்தார். இப்படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட முயன்றபோது எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் பாடல் காட்சி ஒன்றின்போது தன்னை ஆபாசமாக போட்டோ எடுத்து அதை இணைய தளத்தில் வெளியிட்டதாக போலீசில் புகாரும் செய்தார் ஸ்ருதி. எதிலுமே போட்டி மனப்பான்மையுடன் செயல்படும் காஜல் அகர்வாலும் தன் பங்குக்கு கவர்ச்சியை அள்ளி வீசி ரசிகர்களை திணறடிக்க முடிவு செய்தார்.
கிருஷ்ண வம்சி இயக்கிய ‘கோவிந்துடு அந்தரிவாடேலே என்ற டோலிவுட் படத்தில் ராம் சரண் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். இப்படத்துக்கு தணிக்கை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. காஜல் நடித்துள்ள படுகவர்ச்சி காட்சிகளை நீக்கினால்தான் சான்றிதழ் தரப்படும் என்று அதிகாரிகள் கண்டிப்புடன் கூறினர். அதற்கு இயக்குனர் சம்மதம் தெரிவித்தார். குறிப்பிட்ட காட்சிகளை தணிக்கை அதிகாரிகள் வெட்டி தள்ளினர். பின்னர் வெட்டப்பட்ட காட்சிகள் விவரம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.
அதன் விவரம் வருமாறு:முதுகு காட்டிக்கொண்டு நிர்வாணமாக காஜல் நிற்பதுபோன்ற காட்சி, அவரது ஜாக்கெட் பட்டனை ராம் சரண் அவிழ்ப்பதுபோன்ற காட்சி (9 நொடி), பாடல் காட்சி ஒன்றில் காஜலின் தொடைப்பகுதி ஆபாசமாக தெரிவதுபோன்ற காட்சி (7 நொடி), மார்பகம் பகுதியை கொண்டு ஹீரோவை காஜல் இடிக்கும் காட்சி ( 6 நொடி, 2 முறை), 2வது நாயகி சித்ராவை வில்லன் மானப்பங்கப்படுத்தும் காட்சி (5 நொடி). இக்காட்சிகள் நீக்கியபிறகு படத்துக்கு யுஏ சான்றிதழ் வழங்கியது சென்சார்.
No comments: