வசூலில் ஹீரோக்களை அதிர வைக்கும் மேரிகோம்
குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோமின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட படம் மேரி கோம். இதில் பிரியங்கா சோப்ரா மேரிகோமோடு 3மாதங்கள் வாழ்ந்து, அவரது வாழ்க்கை முறையை கற்று, பின்னர் குத்துச் சண்டையின் அடிப்படை விதிமுறைகளை கற்று அதன் பிறகு நடித்தார். கனவு கன்னியாக இருந்த பிரியங்கா சோப்ராவின் குத்துசண்டை விராங்கனை அவதாரம் பாலிவுட்டையே அதிர வைத்தது. ஊர் ஊராக சென்று பிரியங்கா சோப்பரா படத்தை புரமோட் பண்ணினார் அதற்கான பலன் இப்போது கிடைத்திருக்கிறது.
கடந்த 5ந் தேதி படம் வெளியானது. அன்று மட்டும் 8.5 கோடி வசூலித்து ஹீரோக்களை அதிர வைத்தது. இதனை தயாரிப்பு நிறுவனமான வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அடுத்த நாள் 10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. சுமார் 30 கோடியில் தயாரிக்கப்பட்ட படம் 100 கோடி கிளப்பில் சேரும் என்று கணிக்கிறார்கள். பிரியங்கா சோப்ராவுக்கு தேசிய விருது நிச்சயம் என்று படத்தை பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள். சென்னையில் உள்ள மல்டி பிளக்ஸ் தியேட்டர்களிலும் மேரிகோம் திரையிடப்பட்டுள்ளது. -
No comments: