கெஸ்ட் ரோலில் நடிக்கும் விஜயசேதுபதி!
மற்ற ஹீரோக்களிடம் இருந்து மாறுபட்டு வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பதால், இப்போது கோலிவுட்டில் விஜயசேதுபதிக்கென்று ஒரு பாணி உருவாகி விட்டது, யாராவது ஹீரோயிசம் இல்லாத கதைகள் சொன்னால் இது விஜயசேதுபதி பாணி கதையாச்சே என்கிறார்கள். அந்த அளவுக்கு குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு தனித்துவத்தை ஏற்படுத்தி விட்டார் விஜயசேதுபதி.
அதுமட்டுமின்றி, நான் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சொல்லாமல் மற்ற ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் ஒரு நல்ல கேரக்டர் இருந்தாலும் நடிக்கிறார். அந்த வகையில், ரம்மியில் செகண்ட் ஹீரோவாக நடித்த அவர், 'அட்டகத்தி' தினேஷ் நடித்துள்ள திருடன் போலீஸ் படத்தில் ஒரு பாடலில் தோன்றி நடனமாடியிருக்கிறார்.
இந்த நிலையில், பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த விஜயசேதுபதி, அடுத்து 3 ஜி என்றொரு படத்தில் ஒரேயொரு காட்சியில் நடிக்கிறாராம். கதைப்படி படத்தின் கடைசி காட்சியில்தான் அவர் நடிக்கும் காட்சி வருகிறதாம். ஆனபோதும், அந்த காட்சியைத்தான் முதல் நாளில் முதல் காட்சியாக படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
No comments: