ஜி.வி.பிரகாஷைத் தொடர்ந்து விஜய்யுடன் நடனமாடிய அனிருத்! -
சில டைரக்டர்கள் தாங்கள் இயக்கும் படங்களில் ஏதாவது ஒரு கேரக்டரில் தோன்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் டைரக்டர்கள் மணிரத்னம், ஷங்கர், பாலா, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் நடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. திரைக்கு பின்னால் இருந்து படங்களை இயக்குவதோடு நிறுத்திக்கொள்கின்றனர்.
ஆனால், இவர்களில் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யை வைத்து இயக்கிய துப்பாக்கி படத்தில், கூகுள் கூகுள் பாடலில் முகம் காட்டியிருந்தார். அதையடுத்து இப்போது கத்தி படத்திலும் விஜய்-சமந்தா தோன்றும் செல்பிபுள்ள என்ற பாடலில் வந்து செல்கிறாராம். அவர் மட்டுமின்றி கத்தி படத்துக்கு இசையமைத்துள்ள அனிருத்தும் அந்த பாடலில் தோன்றுகிறாராம்.
ஏற்கனவே தலைவா படத்துக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் வாங்கண்ணா வணக்கங்கண்ணா -என்ற பாலில் விஜய்யுடன் தோன்றி சில ஸ்டெப் ஆடியதைத் தொடர்ந்து இந்த படத்தில் அனிருத்தும் விஜய்யுடன் இணைந்து சில ஸ்டெப் போட்டு விஜய்யுடன் நடனமாடி, அவருடன் நடிக்க வேண்டும் என்ற தனது நடிப்பு தாகத்தை தீர்த்துக்கொண்டுள்ளாராம்.
ஆனால் தலைவாவில் விஜய்யுடன் நடித்த பிறகே ஜி.வி.பிரகாஷ்குமார் பென்சில் படத்தில் ஹீரோ அவதாரம் எடுத்தார். ஆக, அவரையடுத்து அனிருத்தும் ஹீரோவாகிறாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
No comments: