நிலைமை புரியாமல் டுவிட்டரில் மோதிக்கொண்ட அஜித், விஜய் ரசிகர்கள்! -
டுவிட்டர், பேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் எப்போதும் அஜித், விஜய் ரசிகர்களுக்குள் கருத்து மோதல் நடப்பது சாதாரணம் தான். ஆனால் தமிழகத்தில் அரசியல் பிரச்சனைகள் தலை தூக்கி நிற்க, அதை மையமாக கொண்டு அவர்கள் செய்த விஷயம் ஒன்று பலரையும் சங்கடப்படுத்தியுள்ளது.நேற்று டுவிட்டரில் #IfAjithBecomesCM மற்றும் #IfVijayIsCm என்ற டேக்கை கிரியேட் செய்து, இதை இந்திய அளவில் ட்ரண்ட் செய்தனர்.இதில் வழக்கம் போல் மாறி, மாறி தங்களுக்கு பிடிக்காத நடிகர்களை திட்டி கொண்டனர். ஒரு முதல்வர் பதவியை வைத்து இவர்கள் இப்படி கேலி, கிண்டல் செய்தது மிகவும் அநாகரிகமானது என்று பலர் டுவிட்டரிலேயே கருத்து தெரிவித்து வந்தனர்.
No comments: