Header Ads

நயன்தாராவை நினைத்துப்பார்க்க நேரம் இல்லை என் வாழ்க்கையில் இன்னொரு திருமணம் கிடையாது நடிகர் பிரபுதேவா பரபரப்பு பேட்டி

என் வாழ்க்கையில், இன்னொரு திருமணம் கிடையாது. நயன்தாராவை பற்றி நினைத்துப் பார்க்க எனக்கு நேரம் இல்லை என்று பிரபுதேவா கூறினார்.

காதல்

தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி, காதலன்  படத்தின் மூலம் கதாநாயகனாகி பின்னர் டைரக்டராக உயர்ந்தவர், பிரபுதேவா. வில்லு படத்தை இவர் டைரக்டு செய்தபோது, நயன்தாராவுடன் காதல் ஏற்பட்டது இந்த காதல் திருமணம் வரை சென்று, அதற்காகவே மனைவி ரமலத்தை விவாகரத்தும் செய்தார். 

பிரபுதேவாவுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். மகன்களுடன் அவர் பாசமாக இருப்பதை நயன்தாரா விரும்பாததால், பிரபுதேவா-நயன்தாரா காதல் முறிந்து போனது.

பேட்டி

இப்போது, பிரபுதேவா இந்தி பட உலகின் முன்னணி டைரக்டர்களில் ஒருவராக இருக்கிறார். மகன்களை பார்ப்பதற்காக அவ்வப்போது சென்னை வந்து செல்லும் அவர்,  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:&

நான் இப்போது அஜய்தேவ்கானை வைத்து, ஆக்ஷன் ஜாக்சன்  என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறேன். இந்த படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது. அடுத்து, சிங் இஸ் பிளிங்க் என்ற இந்தி படத்தை இயக்குகிறேன். ஏ பி சி டி&பாகம் 2 என்ற இந்தி படத்தில் நடிக்க இருக்கிறேன். இந்த படத்தில் சில இளைஞர்கள் என்னுடன் இணைந்து நடிக்கிறார்கள். அதற்காக, உடல் எடையை கணிசமாக குறைத்து இருக்கிறேன்.

தமிழ் படங்களில் நடிக்கவும், டைரக்டு செய்யவும் ஆசையாக இருக்கிறேன். இந்த ஆசை விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு பிரபுதேவா கூறினார்.

அதிக சம்பளம்

அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு பிரபுதேவா அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் டைரக்டர் நீங்கள்தான் என்று பேசப்படுகிறதே?

பதில்:அதிக சம்பளம் வாங்குவதில் சந்தோஷம்தான். ஆனால், சம்பளத்தை பொருத்த வரை எனக்கு அப்பா, தாத்தா எல்லாம் இந்தியாவில் இருக்கிறார்கள். என்னை விட அதிக சம்பளம் வாங்குகிற டைரக்டர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

சோனாக்ஷி சின்ஹா

கேள்வி:சோனாக்ஷி சின்ஹாவை வைத்து தொடர்ந்து மூன்று படங்கள் இயக்க காரணம் என்ன?

பதில்: விசேஷமாக எந்த காரணமும் இல்லை. அதுவாக நடந்தது. சோனாக்ஷி நான் இயக்கிய ரவுடி ரத்தோர்,ஆர்.ராஜ்குமார்Õ ஆகிய படங்களில் ஏற்கனவே நடித்தார். அடுத்து நான் இயக்கி வரும் ஆக்ஷன் ஜாக்சன  படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் சூழ்நிலை அதுவாகவே அமைந்தது.

விஜய்

கேள்வி:தமிழில் எந்த கதாநாயகனின் நடனம் உங்களுக்கு பிடிக்கும்?

பதில்:விஜய் நடனம் பிடிக்கும்.

கேள்வி: உங்களை எல்லா கதாநாயகிகளுக்கும் பிடித்து இருக்கிறதே...அதன் ரகசியம் என்ன?

பதில்:என் நடனம் எல்லோருக்கும் பிடிப்பதால், என்னையும் பிடித்து இருக்கலாம்.

கேள்வி:தனிமையில் வாழ்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:அதுபற்றி கவலைப்படுவதில்லை.


நயன்தாரா
கேள்வி:நயன்தாராவை நினைத்துப் பார்க்கிறீர்களா?

பதில்:பழைய சம்பவங்களை நினைத்துப் பார்க்க எனக்கு நேரம் இல்லை. பெரிய பட்ஜெட்டில் படங்களை இயக்க ஒப்புக்கொள்ளும்போது எனக்கு பொறுப்பு அதிகமாகி விடுகிறது. என்னை நம்பி ரூ.90 கோடி, ரூ.100 கோடி என்று முதலீடு செய்கிறார்கள். அதை நினைத்துப் பார்க்கும்போது, சந்தோஷத்தை விட பயம்தான் அதிகமாக வருகிறது.

கேள்வி:இன்னொரு திருமணம் செய்து கொள்வீர்களா?

பதில்:என் வாழ்க்கையில், இன்னொரு திருமணம் கிடையாது. எனக்கு சினிமாவும், என் குழந்தைகளும்தான் முக்கியம். வேறு எதைப்பற்றியும் நினைப்பது இல்லை.

மேற்கண்டவாறு பிரபுதேவா பதில் அளித்தார்.

No comments:

Powered by Blogger.