அஜீத் சொன்னா விஜய் பாட்டு ஹிட்டுதான்!
நாளைய தீர்ப்பு'' படத்தில் அறிமுகமானவர் விஜய். அதையடுத்து அவர் நடித்த ''ராஜாவின் பார்வையிலே'' என்ற படத்தில் அஜீத் இரண்டாவது நாயகனாக நடித்திருந்தார். அஜீத்திற்காக விஜய்தான் வில்லன்களை பின்னி பெடலெடுப்பார். அந்த படத்தில் நண்பர்களாக நடித்த அவர்கள் அதிலிருந்தே நிஜத்திலும் நட்பை வளர்த்து வருகிறார்கள்.
தற்போது மெகா நடிகர்களாக அவர்கள் வளர்ந்திருக்கும் இந்த நேரத்தில் அவர்களை போட்டியாளர்களாக சித்தரிப்பது, அவர்களது ரசிகர்கள் மோதிக்கொண்டு வருவதோ தொடர்கதையாகி விட்டது. ஆனால், திரைக்குப்பின்னால் விஜய்-அஜீத் இருவரும் அவ்வப்போது சந்தித்து பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் நல்ல நண்பர்களாகத்தான் பழகி வருகிறார்கள்.
குறிப்பாக, இதுவரை எந்த படத்திலும் பின்னணி பாடியதில்லை அஜீத். அதனால் விஜய் பாடுவதை அவர் ரொமபவே ரசித்து வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே விஜய் பாடல்களை விரும்பிக்கேட்டு வரும் அஜீத், தலைவா படத்தில் விஜய் பாடிய வாங்கண்ணா வணக்கங்ண்ணா பாடலையும், தற்போது கத்தி படத்துக்காக விஜய் பாடியுள்ள செல்பிபுள்ள பாடலையும் கேட்டு விஜய்யின் குரலில் இளைஞர்களை சுண்டியிழுக்கு வசீகரம் உள்ளது என்று கூறியுள்ளாராம்.
ஏற்கனவே வாங்கண்ணா வணக்கங்ண்ணா பாடலை கேட்டபோது இந்த பாட்டு கண்டிப்பாக ஹிட்டாகும் என்று சொன்ன அஜீத், இப்போது செல்பிபுள்ள பாடலைக்கேட்டும் இதுவும் ஹிட்டாகும் என்று கூறினாராம். அதையடுத்து இந்த பாடலும் ஹிட்டாகி விட்டதால் தலயின் வாய் முகூர்த்தம் பலித்து விட்டது என்கிறார்கள் கத்தி யூனிட்டினர். -
No comments: