உயிர் நீத்தவர்கள் குடும்பத்திற்கு நிதி..193 பேர் தற்கொலை
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் மனமுடைந்த அ.தி.மு.க, தொண்டர்கள் 193 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில், சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்துள்ள ஜெயலலிதா, உயிர்நீத்த குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ளார். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு சிகிச்சை பெற்று வரும் 3 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments: