விஜய் சேதுபதி என் மூத்த பிள்ளை: சீனு ராமசாமி
கூடல் நகர்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. இப்படத்தில் பரத், பாவனா, சந்தியா நடித்திருந்தனர். இப்படத்திற்குப் பிறகு ‘தென்மேற்கு பருவகாற்று’ படத்தை இயக்கியிருந்தார். இதில் விஜய் சேதுபதி, வசுந்தரா, சரண்யா பொன்வண்னன் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
இப்படத்தில் நடித்ததற்காக சரண்யா பொண்வண்ணனுக்கு தேசிய விருது கிடைத்தது. மேலும் சிறந்த பாடலுக்காக வைரமுத்துவிற்கும் தேசிய விருது கிடைத்தது. இப்படம் அன்னையின் மதிப்பினை அனைவரும் உணரும் வண்ணம் திரைப்படமாக அமைக்கப்பட்டது.
தற்போது சீனு ராமசாமி, இடம் பொருள் ஏவல் என்னும் படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதி, விஷ்ணு, ஐஸ்வர்யா, நந்திதா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். விஜய் சேதுபதி, சீனு ராமசாமி படத்தில் இரண்டாவது முறையாக இணைகிறார். இதனால் இவர்கள் இருவருக்குள்ளும் நல்ல நட்பு உருவாகியிருக்கிறது. இதை வெளிப்படுத்தும் விதமாக சீனு ராமசாமி தனது சமூக வலையதளத்தில் விஜய் சேதுபதி எனது மூத்த பிள்ளை என்று கூறியிருக்கிறார்.
No comments: